சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முங்கேலி மாவட்டத்தின் சரகான் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் கட்டப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தில் சிம்னியை நிறுவும் பணிகள் நடைபெற்றன. அப்போது எதிர்பாராத விதமாக சிம்னி கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் அடியில் […]
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து முடிந்து திரும்பும்போது நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து ஐஈடி வெடிகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இந்த குண்டுவெடிப்பில் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் 5 […]
சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும் விதமாக 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது நாக்கை அறுத்து தியானத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில், தப்ரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவர்கட்டா பகுதியில் உள்ள ஆச்சரிபாலி கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவி, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை 7 […]
சத்தீஸ்கர் : ராய்ப்பூர் அனுபம் நகர் பகுதியில் உள்ள டாக்டர் வீட்டிற்குள் சென்ற டெலிவரி பாய் ஒருவர், இரண்டு பிட்ட்புல் வகையை சேர்ந்த நாய்களால் கடித்து கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் பயங்கர வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ராய்ப்பூர் போரியா மோட்டிநகர் பகுதியைச் சேர்ந்த ஷாஹித் கான் மகன் சல்மான் கான். இவர் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். எனவே, சல்மான் கான் டாக்டர் அக்ஷத் ராவ் வீட்டிற்கு பிவிசி பெனல்கள் கொடுப்பதற்காக […]
சத்தீஸ்கர் : மாநிலம் ராய்பூரில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் (housing board accountant) ஒருவர் திடீரென அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராய்பூரில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் சிசிடிவி வீடியோவில், நரேஷ் சாஹு என்ற கணக்காளர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வைரலாகி வரும் வீடியோவில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் ஒருவர் வேகமாக யோசித்து கொண்டு […]
சத்தீஸ்கர் : பிலாஸ்பூரில் பசுக் கன்று ஒன்றை வேண்டுமென்றே காரால் ஒருவர் நசுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஷாஹித் என்ற நபர் தன்னுடைய காரை வைத்து கன்றுக்குட்டியை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. வேண்டுமென்றே காரை வைத்து பின்னோக்கி கன்றுக்குட்டியை கொலை செய்து இருக்கிறார். சிசிடிவியில் பதிவான வீடியோவின் படி, கார் பின்னோக்கி நகர்ந்தபோது, கன்று சோகத்தில் அலறியது. அருகில் இருந்த பசுக்கள், கன்றுக்குட்டியின் தாய் மற்றும் பிற பசுக்கள், அழுகையை […]
நக்சலைட்டுகள்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது, நக்சல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், இன்று காலை அபுஜ்மத் வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை அபுஜ்மர் பகுதியில் நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 8 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்றும், ஒரு பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம் அடைந்தார் இருவர் காயமடைந்ததாகவும் காவல்துறை […]
சத்தீஸ்கர் : சத்தீஸ்கரின் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது, இதில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் உள்ள வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்தனர். இது அம்மாநிலத்தின் மிகப்பெரிய துப்பாக்கித் தூள் தயாரிக்கும் ஆலை ஆகும். துர்க் மற்றும் ராய்ப்பூர் மாவட்டங்களில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்தன. விபத்தின் போது, இந்த தொழிற்சாலையில் […]
சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் (STF) – நக்சலைட்டுகளுக்கும் நேற்று தொடங்கிய தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர்-பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் (STF) நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நேற்று முதல் அப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் (STF), நக்சலைட்டுகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மொத்தம் 8 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் […]
சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில் பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலையில் டெண்டு இலைகளை பறித்துவிட்டு வீடு திரும்பிய போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.. இதனையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து துணை முதல்வர் அருண் […]
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும், கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் […]
Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் பத்தரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கதியா கிராமத்திற்கு அருகே நடைபெற்ற குடும்ப விழா ஒன்றில் கலந்து கொண்டு தங்கள் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்ததாக அம்மாவட்ட காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த […]
சத்தீஸ்கர் மக்கள் கடந்த வாரம் முதல் புதிய முதல்வரின் பெயர் அறிவிப்பிற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாஜக சட்டப்பேரவைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணுதியோ சாய் முதலமைச்சராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவர்களது காத்திருப்பு முடிவுக்கு வந்தது. விஷ்ணுதேவ் சாய் 30 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்டவர். முன்னாள் முதல்வர் ராமன் சிங்குக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார். சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சத்தீஸ்கருக்கு முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் யார் என எதிர்பார்த்தபோது முன்னாள் […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நேற்று 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது 3 மாநிலங்களிலும் காங்கிரசை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருந்தாலும், கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை வென்று இருந்த […]
சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 7 மற்றும் 27 என இரு கட்டங்களாக 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 68 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. 15 தொகுதிகளில் பாஜக வென்று இருந்தது. 7 தொகுதிகளில் மாநில கட்சியான பிஎஸ்எப் வென்று இருந்தது. காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா […]
சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களில், இன்று சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 90 தொகுதிகளில், 20 தொகுதிகளில் மட்டுமே இன்று தேர்தல் தொடங்கி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதே போல மிசோரத்திலும் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக சத்தீஸ்கரில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 5,304 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 […]
இந்த மாத இறுதிக்குள் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போது சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், இன்று காலை 8 மணி முதல் 20 தொகுதிகளில் மட்டும் தேர்தல் தொடங்கி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதே போல மிசோரத்திலும் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக […]
இந்த மாதம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மிசோராம் மாநிலத்தில் 40 தொகுதிகளில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதே போல 90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இங்கு காங்கிரஸ் -பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தல் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று […]
சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளில் இன்று 20 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 8 மணிக்கு மேலும் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சதீஷ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளன. பாதுகாப்பு சிக்கல்கள் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் நவம்பர் 17ஆம் […]
சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சத்தீஸ்கரில் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது காலை 8 மணிக்கு மேலும் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சதீஷ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளன. பாதுகாப்பு சிக்கல்கள் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. நக்சலைட்டுகள் […]