#BREAKING : அடுத்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசியை விநியோகம்- ஹர்ஷ்வர்தன்..!

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் பேரணியை நடத்தினார்கள். டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர். அப்போது, போலீசார் டெல்லிக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
போலீசார் வைத்திருந்த தடுப்பை மீறி வந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பலர் கண்டணம் தெரிவிக்க தற்போது டெல்லியில் உள்ள புராரி பகுதியில் விவசாயிகள் போராட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டம் குறித்து மத்திய சுகாதாரத்துறை டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியபோது, இந்தியாவில் அடுத்த மார்ச், ஏப்ரலில் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய முடியும் என நம்புகிறோம். ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் உள்ளது. அதன்படி நாங்கள் தயாராகி வருகிறோம்.
முகமூடிகளை அணிந்துகொள்வது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை பின்பற்றுமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவை ஆரோக்கியத்திற்கு முக்கியம் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025