தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம். தமிழகத்துக்கு போதி தடுப்பூசியில் வழங்கக் கோரியும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்படும் கொண்டுவர வேண்டுமென தெரிவித்துள்ளார். மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி ஒதுக்கீடு செய்யவில்லை எனவே த தமிழக மக்கள் தொகை, கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். தமிழக அரசு […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் பரவுதலை குறைக்க கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூக தனிமைப்படுத்த பெரிய கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க வேண்டும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். மேலும், இந்த 11 மாநிலங்களில் அதிகம் கொரோனா எதிர்கொள்ளும் முக்கிய […]
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பதாக ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில் தேர்வு ஒத்திவைப்பதாக ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். In light of the surge in #COVID19 cases,GoI has decided to postpone #NEETPG2021 exam which was earlier scheduled to be held on Apr 18 […]
லண்டனில் பரவும் கொரோனா வைரஸால் மத்திய அரசு முழு முன்னெச்சரிக்கையுடன் உள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேட்டுக்கொண்டார். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுது பல நாடுகளில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை […]
நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு பேசிய, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசிக்கு 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக தெரிவித்தார். இதில் சுகாதார ஊழியர்கள், காவல்துறை, இராணுவ மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்ற முன்னணி ஊழியர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்களில் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை என தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரி மாதத்தில் இந்திய மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று கூறியதுடன், தடுப்பூசிகளின் பாதுகாப்பும், […]
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் பேரணியை நடத்தினார்கள். டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர். அப்போது, போலீசார் டெல்லிக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர். போலீசார் வைத்திருந்த தடுப்பை மீறி வந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பலர் கண்டணம் தெரிவிக்க தற்போது டெல்லியில் உள்ள புராரி பகுதியில் விவசாயிகள் போராட அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், […]
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையில் கோவிட் -19 தயாரிப்புகளை மறுஆய்வு செய்வதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சி.எஸ்.ஐ.ஆரின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்களின் தலைவர்களுடன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் அடுத்த 2.5 மாதங்கள் திருவிழா காலம் மற்றும் குளிர்காலம் என்பதால் இந்தியாவில் கொரோனாக்கு எதிரான போராட்டம் முக்கியமான காலமாக இருக்கும் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் நாம் கொரோனா க்கு எதிராக 10வது மாதத்தில் நுழைகிறோம் […]
கோவிட்19-க்கான ஆயுஷ் தரநிலை சிகிச்சை நெறிமுறைகளை தொடங்க அனுமதி அளித்த மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் முதலில் ஆயுர்வேத மருத்துக்களை எடுத்துக்கொள்கிறாரா? என இந்திய மருத்துவ சங்கம் (IMA) சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் தனது IMA கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு ம.,அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து IMA வெளியிட்டுள்ள தகவல்: (ஹர்ஷ் வர்தன்) ஆயுஷ் ஆயுர்வேத சிகிச்சைக்கு ஆதரவாக நிறுவனங்களின் சுவாரஸ்யமான பெயர்களை எல்லாம் அடிக்கோடிட்டு காட்டுகிறார். இவை அனுபவச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை […]
இன்று கொரோனா மற்றும் அதன் தடுப்பூசி தொடர்பான பல கேள்விகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் தனது வாராந்திர நிகழ்ச்சியான “சண்டே சம்வத்” நிகழ்ச்சியில் பேசும்போது, ஜூலை 2021க்குள் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு கொண்டுள்ளது தடுப்பூசி தயாரான பிறகு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும் என்று கூறினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் இந்த இலக்கை அடைய மத்திய அரசு […]
கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து 6வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. காலையில் நடைபெற்ற மாநிலங்களவையில் வங்கி திவால் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மார்ச் 25-ஆம் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் […]
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்ஸின் இந்தாண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து, அதன் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் இந்திய மருந்து கட்டுபாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஐசிஎம்ஆர் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் சோதனை நிலையில் பல்வேறு […]
பாடகர் எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து குணமடைய பிராத்தனை செய்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாடகர் எஸ். பி. பிக்கு உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை […]
உலகநாடுகளை விட, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் மற்ற உலகநாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 25,30,490 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,09,702 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதில் 49,170 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்தியா 130 கோடி மக்கள் தொகையுடன் […]
இந்தியாவில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு கடந்த 19-ஆம் நாட்களில் குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார்.காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப்சிங் பூரி பங்கேற்றனர். இதன் பின் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில்,இந்தியாவில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு கடந்த 19-ஆம் நாட்களில் குறைந்துள்ளது.கொரோனாவால் பாதித்து குணமடைவோரின் விகிதமானது 58%-க்கும் அதிகமாக உள்ளது.ஏறக்குறைய 3 லட்சம் […]
இந்தியாவில் மொத்தமுள்ள 736 மாவட்டங்களில் 400 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாகத்தான் முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கைக்காக நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில […]
இந்தியாவில் கொரோனாவால் 6412 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சற்று நேரத்திற்கு முன் பேட்டியளித்தார்.அப்போது , கொரோனாவில் இருந்து மீள மேலும் மூன்று வாரம் தேவை. இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதில் பெரும் சவாலாக உள்ளது. மூன்று வாரம் வீட்டில் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார். கொரோனாவை ஒழிப்பதில் மத்திய , மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் . பல மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலங்கள் 100 சதவீத […]
நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் ரூ.367 கோடி செலவில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் தமிழக […]
இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் கொரோனா வைரஸ் குறித்த பேசினார். அதில் ,உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கு முன்பே ஜனவரி 17 -ம் தேதி முதல் இந்தியா தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸால் மார்ச் 4 -ம் தேதி ( நேற்றுவரை ) 29 பேர் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மார்ச் 4 -ம் தேதி வரை மொத்தம் 28529 நபர்கள் கண்காணிப்பின் கீழ் […]
இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 17 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இதனிடையே கொரோனவால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த மூன்று பேர் சிகிச்சை பின் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு இன்று முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓபிஎஸ், மற்றும் பலர் அமைச்சர்கள் பங்கேற்றனர் . மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.345 கோடியில் பட்டணம்காத்தானில் மருத்துவக் கல்லூரி அமைகிறது. இந்நிலையில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் , மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 50 ஆண்டு பழமையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரையில் […]