#BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C50 ராக்கெட்.!

PSLV C50 rocket successfully launched from Sriharikota, Andhra Pradesh at exactly 3.41 pm. ISRO scientists happy.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட். இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த நிலையில் ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் சரியாக இன்று மாலை 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இஸ்ரோ ஏவும் 2வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி சி50 சிஎம்எஸ் -01 ஆகும். இந்த செயற்கைகோள், கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை சேகரிப்பதற்கு விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பட்டு உள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் இதுவரை 41 செயற்கைகோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட நிலையில், CMS-01 விண்ணுக்கு செல்லும் 42 வது செயற்கைகோள் ஆகும். இதன் ஆயுள் காலம் 7 ஆண்டுகள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தகவல் தொடர்புக்காக கடந்த 2011- ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் செயற்கைக்கோள் ஆயுள் காலம் முடிந்தது நிலையில், தற்போது சிஎம்எஸ் -01 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.