#BREAKING: வீட்டுத்தனிமை – மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு!

The federal government has issued new rules regarding the privacy of a home for a corona victim.

கொரோனா பாதிக்கப்பட்டவருக்கான வீட்டுதனிமை குறித்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

கொரோனாவால் வீட்டுதனிமையில் இருப்போருக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில் 7-வது நாளில் தனிமைக்காலம் நிறைவடையும் என்றும் மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில் 7-ஆவது நாளில் மறுபரிசோதனையின்றி வீட்டு தனிமையை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

மேலும், மூச்சு விடுதல் சிரமம், தொடர்ந்து நெஞ்சுவலி, மனக்குழப்பம், கடும் களைப்பு இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.