#Breaking:வெள்ளம் வரப்போகுது…இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Default Image

கர்நாடகவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது.அதன்படி,உடுப்பி,உத்தர கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும்,ஹசன் மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே,தொடர் மழை காரணமாக கர்நாடகவில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,கர்நாடகாவில் அணைகளில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,மேட்டூர் அணைக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இதனால்,காவிரி கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி,தருமபுரி உள்ளிட்ட பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்