#BREAKING: மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது! உபரி நீர் திறப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் திறப்பு. சேலம்: தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மேட்டூர் அணை வரலாற்றில் 42-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது நீர்மட்டம். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் 4 நாட்களில் அணை நீர்மட்டம் 20 அடி வரை உயர்ந்தது. முதல் கட்டமாக 16 கண் மதகு வழியாக 25,000 கன அடியும், … Read more

விவசாயிகளுக்கு நற்செய்தி…முதல் முறை;மேட்டூர் to கடைமடை – திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை (24-ஆம் தேதி) தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் இந்த ஆண்டு முன்கூட்டியே நாளை (மே 24-ஆம் தேதி) திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் … Read more

#BREAKING: விவசாயிகளுக்கு நற்செய்தி.. மே 24ல் மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா … Read more

#Breaking:வெள்ளம் வரப்போகுது…இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கர்நாடகவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது.அதன்படி,உடுப்பி,உத்தர கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும்,ஹசன் மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே,தொடர் மழை காரணமாக கர்நாடகவில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,கர்நாடகாவில் அணைகளில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,மேட்டூர் அணைக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இதனால்,காவிரி கரையோர … Read more

காவேரி டெல்டா பாசனத்திற்கான ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவிரி டெல்டாவின் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்கள் 16 லட்சத்திற்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதிக்காக மேட்டூர் அணையையே நம்பி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் தேதி  தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் … Read more

ஓரே ஆண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை 100அடியை எட்டியது .!

நடப்பாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100அடியை எட்டியது. “நிவர்” புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதன் விளைவால் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்றயை காலை நிலவரப்படி,  நீர் இருப்பு 64.84 டி.எம்.சி,யாக உள்ளது. இன்று காலை 11 … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து 14,525 கன அடியாக அதிகரிப்பு.!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றய நிலவரப்படி 98.46 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 62.86 டி.எம்.சி. ஆகவும் இருக்கிறது. மேலும், அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்ட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,160 கன அடியில் இருந்து 14,525 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது, மேட்டூர் அணை நீர்மட்டம் 98.15 அடியாகவும், நீர் இருப்பு 62.46 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,160 கன அடியாக குறைவு.!

காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிலிகுண்டுலு அணையின் நீர்வரத்து 10,318 ஆயிரம் கன அடியில் இருந்து 8,160 கன அடியாக குறைந்தது. இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றய நிலவரப்படி 98.46 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 62.86 டி.எம்.சி. ஆகவும் இருக்கிறது. மேலும், அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்ட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 16,741 கன அடியாக குறைவு.!

மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 27,212 கன அடியில் இருந்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான100 அடியை எட்டியது. தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர்இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து விநாடிக்கு 27,212 கன அடியில் இருந்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் … Read more

2-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது..!

 கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான100 அடியை எட்டியது. தற்போது அணைக்கு விநாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர்வரத்து வருகிறது. மேலும், அணையில் இருந்து 14,900 கன அடிநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.