தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் கனமழை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், […]
கர்நாடகவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதன்படி,உடுப்பி,உத்தர கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும்,ஹசன் மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே,தொடர் மழை காரணமாக கர்நாடகவில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,கர்நாடகாவில் அணைகளில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,மேட்டூர் அணைக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இதனால்,காவிரி கரையோர […]
முழு கொள்ளளவை எட்ட உள்ள மதுராந்தகம் ஏரி திறக்கப்பட உள்ளதால், உபரி நீர் வெளியேறும் கிளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏறி அதன் முழு கொள்ளளவான 23 அடியை கொண்டுள்ளது. இந்நிலையில், அதன் அடியில் 22 அடியை எட்டியதால் கரையோர மக்கள் பாதுகாப்பு இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுருத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் “நிவர்” புயல் காரணமாக பெய்த அதீத மழை பொழிவினால் மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் வட்டம், […]
செம்பரப்பாக்கம் ஏரியில், உபரிநீர் திறப்பால் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற […]
தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. தற்போது, இந்த அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நிரம்பும் நிலையில் உள்ளத்து. இந்நிலையில், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.