தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகிறது. […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், கரையோர மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இன்று நள்ளிரவு அந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. அதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் , கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகா […]
தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அணைகள், ஏரிகள் என நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில், தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாறு அணைக்கட்டில் இருந்து 1,724 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாலாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் […]
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் காவிரி கரையோரம் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிகமாகியுள்ள காரணத்தால் அணையில் இருந்து நீர் திறந்துவிட படுகிறது. மேலும், காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய ஆறுகளின் நீர்பிடிக்குகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் மேட்டூர் […]
11 காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், 11 காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான […]
கர்நாடகவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதன்படி,உடுப்பி,உத்தர கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும்,ஹசன் மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே,தொடர் மழை காரணமாக கர்நாடகவில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,கர்நாடகாவில் அணைகளில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,மேட்டூர் அணைக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இதனால்,காவிரி கரையோர […]
கனமழை காரணமாக 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்ட நெருங்கி விட்டது. ஏரியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் எந்நேரத்திலும் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை […]
பூண்டி ஏரியிலிருந்து மதியம் 2 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுவதால் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்றைய […]
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி உள்ளது. நீர்வரத்து 68,489 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 92.534 டிஎம்சி-யாக உள்ளது. வெளியேற்றம் 30,000 கனஅடி -யாக உள்ளது. கரையோரம் உள்ள 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கரையோர […]