#BREAKING: கோவோவேக்ஸ் தடுப்பூசி – அவசர பயன்பாட்டிற்கு அனுமதி!

கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்து, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 12 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இளைஞர்களுக்கு கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக ‘நோவோவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
ஐரோப்பிய மருத்துவ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நோவோவேக்ஸ் தடுப்பூசியின் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதுதான் கோவோவேக்ஸ் தடுப்பூசியாகும். கோவோவேக்ஸ் தடுப்பூசியை பெரியவா்களின் அவசர பயன்பாட்டுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025