அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே தடுப்பூசியை செலுத்த வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். முன்னெச்சரிக்கை தடுப்பூசியை இலவசமாக மக்களுக்கு செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கடந்த 10ம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கு […]
தனியார் தடுப்பூசி மையங்கள்,அதிகபட்சமாக ரூ.150 வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தல். இந்தியாவில் கொரோனா பூஸ்டர் டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த நிலையில்,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.மேலும்,பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று […]
இரண்டு தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல். இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் 18 வயதிற்கு […]
கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்து, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 12 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இளைஞர்களுக்கு கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக ‘நோவோவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. ஐரோப்பிய மருத்துவ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட […]