கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்து, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 12 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இளைஞர்களுக்கு கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக ‘நோவோவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. ஐரோப்பிய மருத்துவ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட […]