#BREAKING: அக்னிபத் வழக்குகள் – டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Default Image

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி இருந்தனர். குறிப்பாக பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள், வன்முறையும் அரங்கேறியது. இதனைத்தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்குகள் அனைத்தும் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025