எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த முடிவுக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க அவகாசம் அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க 6 வாரம் அவகாசம் தந்து டெல்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த முடிவுக்கு எதிராக ராம்குமார் ஆதித்தன், கேசி சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதிமுக பொதுக்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சியின் சட்ட விதிகள் மாற்றம், தீர்மானங்களை ஏற்றது […]
உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு. சிவசேனா சின்னம் முடக்கட்டப்பட்டதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. சிவசேனா சின்னம் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மராட்டிய முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும் சின்னத்துக்கு உரிமை கோரின. இரு அணிகளும் […]
33 வார கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி. 26 வயதாகும் பெண்ணின் 33 வார கருவை கலைக்க, அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கருவை கலைக்க மருத்துவமனை அனுமதி மறுத்த போதிலும் பெண்ணின் கோரிக்கையை ஏற்று டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கருவை கலைப்பது பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் கருத்து தெரிவித்துள்ளார். கருவிற்கு மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பது […]
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு. மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று […]
நாட்டில் 5ஜி சேவைக்கு தடைவிதிக்க கோரிய பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுடன், அவருக்கு 20 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த 5ஜி தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது எனவும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா அவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இது குறித்து தெரிவித்த பாலிவுட் நடிகை ஜூகி, 5ஜி […]
480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு தராவிடில் டெல்லியில் நிலைமை முற்றிலும் சீரழிந்துவிடும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல். நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு நேர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், டெல்லி மருத்துவமனைகளுக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் தலைநகர் […]
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சனை பற்றி வழக்கு விசாரணை தொடரும் என்று மும்பை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு ஆக்சிஜன், தடுப்பூசி வழக்குகள் மாற்றப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. ஆனால், மும்பை ஐகோர்ட் ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சனை தொடர்ப்பான வழக்குகளை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதனால், ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சனையை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிப்பதாக அரசு வழக்கறிஞர் கூறினார். இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை தற்போது மிகவும் முக்கியமான பிரச்சினை. […]
ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு இரண்டு ஆண்டு சிறை தணடனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரியை தாக்கி, பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில், ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு தற்போது இரண்டு ஆண்டு சிறை தணடனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 149 (சட்டவிரோதம்), 147 (கலவரத்திற்கான தண்டனை) மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் […]
அமிதாப்பச்சனின் குரலுடன் வரும் கொரோனா காலர் ட்யூனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை நீக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ராகேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை, நீதியின் நலனுக்காக மொபைலில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன் அத்தகைய சேவைக்கு பொருத்தமானவர் அல்ல, […]
பி.ஜி படிப்புகளின் முடிவுகளை அக்டோபர் – 31 க்குள் வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவுகளை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கவும். அதன், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தியது . இந்நிலையில், அக்டோபர் 20 முதல் 31 வரை, இளங்கலை படிப்புகளின் முடிவுகளை அறிவிப்பதற்கான பல்வேறு காலக்கெடுவை உயர் நீதிமன்றம் நிர்ணயித்தது. மேலும், பி.ஏ படிப்புகளுக்கு, நவம்பர் – 6 ஆம் தேதி […]
இந்தியாவில் தற்போது, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது. இதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது. இந்த புதிய சூழலியல் வரைவின்மீது மக்கள் கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை யை ஆங்கிலம், இந்தி உள்பட 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். அப்போது தான் […]
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய தினகரனின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதன் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க […]
நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது. குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது […]