புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் – அமைச்சர் நமச்சிவாயம்

Minister Namassivayam informed that we will urge the NR Congress, the alliance leader, to contest the BJP in the state elections.

மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிட கூட்டணி தலைமையான என்ஆர் காங்கிரேசிடம் வலியுறுத்துவோம் என அமைச்சர் நமச்சிவாயம் தகவல்.

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் பின் செய்தியாளரிடம் பேசிய பாஜக அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிட எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.

சின்ஹா தீர்மானத்தின் அடிப்படையில், மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் என்றும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியை நேரடியாக சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்துவோம் எனவும் கூறினார்.

சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சி உள்ளது. இதனால் மாநிலங்களவை எம்பியாக பாஜக உறுப்பினர் இருந்தால் புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தேர்வா என்பதை மேலிடம் தான் முடிவு எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.