மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் அம்மாநிலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு தாவல் கிடைக்கேவே, இவருக்கு சொந்தமான மற்றும் இவரது உறவினர்கள் வீட்டில் தீவிர சோதனையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
குர்னுலில் உள்ள அவரது வீட்டில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் கிடைக்கப் பெற்றதாகவும், பெங்களூருவில் 3 கோடி மதிப்புள்ள ஒரு அப்பார்ட்மெண்டும், 2 கோடி மதிப்புள்ள வீட்டுமனையும் இருப்பதாகவும், ஹைதராபாத்தில் 1.5 கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்ட்டும் ஒரு கோடி மதிப்பிலான வீட்டு மனையும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிவபிரசாத்துக்கு அவர் சம்பந்தமான குர்னூல், ஹைதராபாத், பெங்களூரு, தடிபட்ரி என ஐந்து இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தீவிர சோதனையில் சுமார் 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025