திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தானமாக பெறப்பட்ட நிலங்களை விற்கும் முடிவை பரிசீலனை செய்யுமாறு ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலிலுக்கு பக்தர்கள் தானமாக நிலங்களை கொடுப்பது வழக்கம். அப்படி பெறப்பட்ட நிலங்களை விற்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இந்த முடிவை பரிசீலனை செய்யும் படியும், அதுவரையில் நிலம் விற்கும் முடிவை கைவிடும்படியும் ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத குருக்கள், பக்தர்கள், ஆன்மீகவாதிகளின் அறிவுறுத்தலை பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்த்ர்கள் தானம் செய்த நிலத்தில் […]
விஷவாயு தாக்கி ஆந்திராவில் 8 பேர் பலியான விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு விஷவாயு ஒன்று வெளியானது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக […]
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மோகன கிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது. இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி வரதட்சணை வாங்கிவிட்டு ஏமாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்ட நந்தியால் பகுதியை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன். இவருக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன் தினம் நடைபெறுவதற்காக வேலைகள் திருமண நாளுக்கு முந்தைய நாளில் தீவிரமாக நடைபெற்றன. அந்த நேரம் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து ஒரு பெரிய […]
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து, முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறார். மதுபான கடைகள் குறைப்பு, மதுபான பார் லைசென்ஸ் கட்டணம் கடுமையாக உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அடுத்த அதிரடியாக ஆந்திர மாநிலத்தை லஞ்சம் இல்லாத மாநிலமாக உருவாக்க தற்போது புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் […]
ஆந்திராவில் தற்போது பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது குறி வைத்துள்ள திட்டம் ஆந்திராவில் பூரண மதுவிலக்கு. அதற்கு தற்போது முதற்படியாக லைசென்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தி முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதுவரை 798 பார் லைசென்சை ஆந்திர அரசு ரத்து செய்துள்ளது. மேலும், மூன்று நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதற்கு மேல் உள்ள ஹோட்டல்களில் பார் லைசென்ஸ் பெறுவதற்கு 10 லட்சம் கட்டணம் […]
ஆந்திரா மாநிலம் சித்தூரில் துணை ஆட்சியர் ( சப் கலெக்டர் ) கீர்த்தி ‘மக்கள் குறை தீர்ப்பு முகாம்’ நடத்தினார். அப்போது, அந்த கூட்டத்தில், சித்தூரை சேர்ந்த பாவா ஜான் என்பவர் துணை ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவை பார்த்த துணை ஆட்சியர் ஷாக் ஆகியுள்ளார். அதில், ‘ பாவா ஜான், தனது தங்கை திருமணத்தினை பெரிதாக நடத்தவேண்டும். அதற்க்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை. ஆதலால், எனது உடல் உறுப்புகளான கிட்னி போன்ற பாகங்களை […]
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் அம்மாநிலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு தாவல் கிடைக்கேவே, இவருக்கு சொந்தமான மற்றும் இவரது உறவினர்கள் வீட்டில் தீவிர சோதனையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குர்னுலில் உள்ள அவரது வீட்டில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் கிடைக்கப் பெற்றதாகவும், பெங்களூருவில் 3 கோடி மதிப்புள்ள ஒரு அப்பார்ட்மெண்டும், 2 […]
ஆந்திர மாநிலத்தில் தற்போது பெருமழை பெய்துவருகிறது. இதனால், அங்குள்ள பல ஊர்களில் சுற்றுயும் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குத்தி பகுதியில் மழைநீர் ஊருக்குள் உட்புகுந்து தேங்கி கிடப்பதால், அந்த ஊரில் எங்கு பார்த்தாலும் தவளை மயமாக இருஇருக்கிறதாம். இதனால் கிராமவாசிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனராம். மழைநீரில் மட்டுமல்லாமல், குடிப்பதற்காக வைத்து இருக்கும் நேரிலும் தவளைகள் குதித்து விளையாடுகிறதாம் இதனால் கிராம வாசிகள் எப்போது இந்த பேய் மழை நிற்கும், நமக்கு எப்போது […]
ஆந்திர மாநிலம் தேவிபட்டினத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் 60 பேர் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது அவர்கள் சென்றுள்ள சுற்றுலா படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணித்த 61 பேரும் நீரில் மூழ்கினர். இதில் 27 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். மீதம் உள்ள 34 பேரில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளன. இன்னும் நீரில் மூழ்கிய 27 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் தேவிபட்டினத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் 60 பேர் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது அவர்கள் சென்றுள்ள சுற்றுலா படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணித்த 60 பேரும் நீரில் மூழ்கினர். இதில் 27 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். மீதம் உள்ள 33 பேரை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியினை பரபரப்பாக்கி உள்ளது.