அய்யோ கொடுமை! பலாத்காரம் செய்யப்பட்ட மாடு.. சிசிடிவியில் சிக்கிய நபர்.. காவல்துறை உடனடி கைது!

Default Image

உத்தரப் பிரதேசத்தில் பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த நபரை உள்ளூர்வாசிகள் மூலம் கைது செய்த காவல்துறை.

உத்தரபிரதேசம் லக்னோவில் சரோஜினி நகர் பகுதியில் பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்ததாக மஜித் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஏப் 23-ம் தேதி (சனிக்கிழமை), பசுவுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்ட குற்றவாளி, அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் நடந்த பிறகு கடந்த செவ்வாய்கிழமை அண்டை வீட்டார் ஒருவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆட்சேபகரமான நிலையில் பசுவை ஒருவர் பிடித்து வைத்திருப்பதைக் கண்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த உள்ளூர்வாசிகள், அந்த நபரை மஜித் என அடையாளம் கண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர் மாட்டின் உரிமையாளரான ஜிதேந்திர யாதவுக்கு தகவல் அளித்ததை அடுத்து, அவர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மஜித் என்பவர் தனது பசுவுடன் உடலுறவு கொள்வது தொடர்பான சிசிடிவி காட்சிகளில் காணப்பட்டதாக யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உள்ளுர்வாசிகளே குற்றவாளியை தேடத் தொடங்கிய நிலையில், குற்றவாளி சிக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து, பசுவை பலாத்காரம் செய்த நபரை காவல்துறை உடனடி கைது செய்துள்ளது. இதுகுறித்து, சரோஜினி நகர் நிலைய அதிகாரி சந்தோஷ் குமார் ஆர்யா கூறுகையில், கிராம மக்கள் கோபமடைந்து, லக்னோவின் சரோஜினி நகரில் உள்ள தரோகா கேராவில் இருந்து குற்றவாளியை பிடித்தனர் என கூறினார்.

விலங்குகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்படுவது இது முதல் முறை அல்ல, முன்னதாக கடந்த மார்ச் 27 அன்று, உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள பிபால்கோட்டி கிராமத்தில் பெண் கன்றுக்குட்டியை பாலியல் பலாத்காரம் செய்த ஆலம் அன்சாரி என்ற 32 வயது நபர் கைது செய்யப்பட்டார் என்றும் தகவல் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்