உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம் குழந்தைகள் 10 பேர் பலியாகினர். பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தின்போது, குழந்தைகள் வார்டில் 54 பேர் இருந்த நிலையில், 26 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் 16 குழந்தைகள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சரியாக, இரவு 10.30 முதல் 10.45 மணிக்குள் இந்த […]
டெல்லி : கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவிருந்த 14 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக, வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில் […]
உத்தரபிரதேசம் : திருமணங்களின் போது அனைவரும் உணவு விரும்பி சாப்பிடுவது உண்டு. ஒரு சில இடங்களில் உணவில் எதாவது பூச்சி அல்லது உணவு சரியில்ல என்றால் சண்டை நடந்ததை நாம் கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், பிரியாணியில் சிக்கன் லெக் பீஸ்கள் இல்லாததால் போனதால் ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளது. மணமகன் தரப்பில் இருந்து வந்த விருந்தினர்கள் திருமணத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் சிக்கன் லெக் பீஸ் […]
இஸ்லாமியர்கள் பெயரில் போலியாக இமெயில் கணக்கு தொடங்கி, அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் விரைவில் திறக்கப்பட உள்ள ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் 2 பேரை உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். அயோத்தி ராமர் கோவிலில் வெடிகுண்டு வீசப்படும் என உபி டிஜிபி தலைமையகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று எக்ஸ் தளத்தில் மிரட்டல் இமெயிலில் வந்ததை […]
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தகவல் அறிந்து சென்ற ஆக்ரா போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு பெண் உட்பட 4 ஆண்கள் என 5 பேரை கைது செய்தனர். சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு ஆக்ராவில் உள்ள காவல்நிலையத்திற்கு ஒருவர் போன் செய்து , ஆக்ராவில் உள்ள பணக்கார தங்கும் விடுதியில் ஒரு பெண் […]
குண்டர் சட்டத்தில் முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேங்ஸ்டர் மற்றும் அரசியல்வாதியான முக்தர் அன்சாரிக்கு 2009 குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் அன்சாரியின் கூட்டாளி சோனு யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த […]
உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , இன்று ஓர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளில் டால்பின்களின் எண்ணிக்கையானது கனிசமான அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டால்பின்களை உத்திர பிரதேச மாநில அரசு நீர்விலங்கு என அறிவித்தார். இந்த அறிவிப்பு விழாவில் அவர் பேசுகையில், உத்திர பிரதேசத்தில் உள்ள சம்பல், கங்கை, கெருவா, காக்ரா, ராப்தி மற்றும் யமுனா போன்ற இந்திய நதிகள் புகழ்பெற்ற டால்பின்களின் தாயகமாக […]
உத்தரபிரதேசத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் 3 சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுப்பிலிருந்து தீ மூடப்பட்டபோது வீட்டில் தீப்பிடித்ததாக முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், […]
இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 5% அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்ட அரசு. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5% அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2022-இல் அதிகபட்சமாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் உத்தரபிரதேசத்திலும், இதன்பின் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் பீகாரிலும் பதிவாகியுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) படி, ஒன்பது இந்தியர்களில் ஒருவருக்கு வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
சிக்கிம் விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி மற்றும் வேலை வழங்கப்படும் என அறிவிப்பு. சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்த விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் நேற்று ராணுவ வீரர்கள் […]
உத்தரப் பிரதேசத்தில் 37,000 ஓபிசி பெண்களுக்கு திருமண உதவி தொகையை அறிவித்தார் அம்மாநில அமைச்சர். உத்தரப் பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைச் சேர்ந்த 37,500 பெண்களுக்கு, அவர்களின் திருமணத்தின் போது தலா ரூ.20,000 திருமண உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நரேந்திர காஷ்யப் அறிவித்துள்ளார். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்தத் தொகை திருமணத்திற்கு 90 […]
உ.பி.யில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 50 பேர் காயம் என தகவல். உத்தரப்பிரதேசம் முழுவதும் இன்று அடர்ந்த மூடுபனி காரணமாக நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுரையா, கான்பூர் தேஹாட், கன்னோஜ், உன்னாவ் மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் […]
உ.பி.யில் 75 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயம். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சைதாபாத் பகுதியில் 75 மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. காந்தி தேவி ஜனதா வித்யாலயா பள்ளி மாணவர்களை ஜான்பூரில் இருந்து பிரயாக்ராஜில் உள்ள மங்காருக்கு சுற்றுலா அழைத்துச் […]
வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு தகவல். 2017 முதல் 2021 வரை இந்தியாவில் 35,493 வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 35,493-ஆக பதிவாகியுள்ளது என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில், வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பீகாரில் 5,354 பேர், மத்தியப் பிரதேசத்தில் 2,859 பேர், மேற்கு வங்கத்தில் 2,389 பேர் மற்றும் […]
சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனைக்கு நடத்த வேண்டு என்ற கோரிக்கை நிராகரிப்பு. உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் 5 இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன்பின், ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, வீடியோவாக […]
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம். அரசு மரியாதையுடன் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் இன்று மாலை […]
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர் என பிரதமர் மோடி ட்வீட். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவால் இன்று காலமானார். கடந்த ஒரு வாரமாக ஹரியானாவின் குருகிராமில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் ஐயூசிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்தது. உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு […]
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, டெல்லி அருகே மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அக்.2ம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்-வின் […]
முலாயம் சிங் யாதவின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ்-வின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்வுக்கு உயிர் காக்கும் கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் முலாயம் சிங் […]
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தின் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் முறைக்கு உத்தரவிடகோரி வழக்கு தொடுக்கப்பட்டது. ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். […]