லக்னோ : ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான இந்திய உள்ளூர் கோப்பை தொடரான இரானி கோப்பை தொடரின் டெஸ்ட் போட்டியானது லக்னோவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டி டிராவானதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் மும்பை அணி இந்த போட்டியை வெற்றி பெற்றுள்ளது. இதனால், 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் வெற்றி பெற்ற இந்த மும்பை அணிக்கு, ரூ.1 கோடி பரிசுத்தொகையை […]
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து மோதி பெட்ரோல் நிலைய ஊழியர் தேஜ்பால் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை பஸ் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு வந்து இருந்தது. அப்போது அருகில் பெட்ரோல் நிலைய ஊழியர் பைக் ஒன்றுக்கு காற்று அடித்து கொண்டு இருந்தார். பின், நின்று […]
லக்னோ : லக்னோவின் வசீர்கஞ்ச் பகுதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது பின்னால் வந்த பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் திடுக்கிடும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி தற்போது இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. விபத்து நடந்த பிறகு, பேருந்து ஒரு கணம் மெதுவாகச் சென்றது, ஆனால் பாதிக்கப்பட்டவரைச் சரிபார்க்க டிரைவர் நிறுத்தாமல், அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றார், விபத்து வசீர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நகர முதியோர் […]
லக்னோ மாவட்ட சிறையில் ஏற்கனவே 27 பேருக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பரில் எடுத்த பரிசோதனையை அடுத்து மேலும் 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில், உத்தரபிரதேச மாநில சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட பரிசோதனையை தொடர்ந்து நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பரிலிருந்து எச்.ஐ.வி பரிசோதனைக் கருவிகள் கிடைக்காததே சோதனை தாமதமானதற்குக் காரணமாக அமைந்தது. பாதிக்கப்பட்ட […]
2024 ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் கொல்கத்தா […]
2 லட்ச ரூபாய் வரதட்சனை கேட்டு தராததால் விவாகரத்து செய்த நபர். இதனை கேள்விப்பட்டு பெண்ணின் தயார் உயிரிழந்தார். வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும், இன்னும் அது பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் சில உயிரிப்புகள் கூட அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. உத்திர பிரதேசம், லக்னோவில் திருமணத்தின் போது வரதட்சணையாக 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் வாங்கி தருவதாக கூறியதாகவும் அதனை வாங்கி தரவில்லை என்பதால் யூனஸ் […]
கடந்த திங்கள் கிழமை இரவு வானில் மர்மமான விளக்குகள் தோன்றியது. இந்த விளக்குகளை கான்பூர், லக்னோ, மற்றும் பல உத்தர பிரதேச நகரங்களில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் மக்கள் பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுடைய சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்து கொண்டனர். விளக்குகளின் புள்ளி இடப்பட்ட பாதை ரயில் போல நகர்வதாகவும் கூறினார்கள். அவை UFO (Unidentified Flying Object) எனும் கண்டறியப்படாத பறக்கும் […]
லக்னோவில் உள்ள லெவானா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஹோட்டல் லெவனாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஐந்து முதல் ஆறு பேர் இன்னும் ஹோட்டல் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று(செப் 5) காலை தீ விபத்து ஏற்பட்டது. ஹோட்டலில் தங்கியிருந்த பலரும் தங்களுடைய அறைகளின் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு விடுதியிலிருந்து தப்பிக்க முயன்றதாக […]
குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றனர் என பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சு. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.80,000 கோடி மதிப்பிலான 1406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்பின் இவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி, 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கதைக்கு உத்வேகம் அளிக்கப்போவது உத்தரபிரதேசம் என நம்புகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உந்து […]
உத்தரப் பிரதேசத்தில் பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த நபரை உள்ளூர்வாசிகள் மூலம் கைது செய்த காவல்துறை. உத்தரபிரதேசம் லக்னோவில் சரோஜினி நகர் பகுதியில் பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்ததாக மஜித் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஏப் 23-ம் தேதி (சனிக்கிழமை), பசுவுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்ட குற்றவாளி, அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் நடந்த பிறகு கடந்த செவ்வாய்கிழமை அண்டை வீட்டார் ஒருவர் […]
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதே மைதானத்தில் உபி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார் யோகி ஆதித்யநாத். லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ஆளுநர் ஆனந்தி பென படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். லக்னோவில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இவ்விழாவில் உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வராக கேசவ் பிரசாத் […]
புதிய நகர்ப்புற இந்தியா திட்டத்தை தொடக்கி வைப்பதற்காக இன்று பிரதமர் மோடி லக்னோ செல்கிறார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆசாதி75 புதிய நகர்ப்புற இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கப்பட உள்ள நிலையில், இன்று லக்னோ செல்லவுள்ள பிரதமர் மோடி புதிய நகர்ப்புற இந்தியா திட்டத்தின் மாநாடு மற்றும் கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார். மேலும் அங்குள்ள 75 மாவட்டங்களில் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற வீடுகள் திட்டத்தையும் […]
லக்னோவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தற்போது தொடங்கியது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளனர். நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சில் […]
சீருடையில் இருந்த ஒரு பெண் கான்ஸ்டபிள் முகத்தில் இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பெண் போலீஸார் ஒருவர் சீருடை அணிந்து இளஞ்சிவப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பிரபாத் குமார் என்பவர் பெண் கான்ஸ்டபிளை பார்த்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதனால் கோபமடைந்த பெண் கான்ஸ்டபிள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பிரபாத் குமார் இரும்பு கம்பியால் பெண் கான்ஸ்டபிளை தாக்கினார். பெண் கான்ஸ்டபிள் முகத்தில் தாக்கி […]
அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு இந்த வாரம் இறுதிக்குள் வெளியகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி […]
அண்ணாத்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பாக படக்குழு லக்னோ சென்றுள்ளனர். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், படத்தின் தங்களுக்கான படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் தினத்தை முன்னிட்டு ஒரு ஜோடி ஆடு ரூ.4.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு சில நாட்களில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதேபோல் பக்ரீத் தினத்தை முன்னிட்டு உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவிலும் ஆடுகள் சந்தை அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் லக்னோவின் கோம்தி ஆற்றங்கரையில் ஒரு ஜோடி ஆடு ரூ.4.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள இந்த ஆடுகள் 170 மற்றும் 150 கிலோ […]
நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்காக 12 மணிநேரம் பிபிஇ கிட்டுடன் 2,500 கி.மீ. தொலைவு விமானத்தில் மருத்துவர்கள் பயணித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மருத்துவர்கள் நோயாளிகளின் உயிரை காப்பாற்றி வருகின்றனர். அப்படி நோயாளியின் உயிரை காப்பாற்ற 12 மணி நேரம் பிபிஇ கிட்டுதான் 2,500 கி.மீ தொலைவு பயணித்துள்ளனர் ஒரு மருத்துவர்கள் குழு. இது குறித்து இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கோவினி பாலசுப்பிரமணி கூறியிருப்பதாவது, மே மாதத்தின் மத்தியில் லக்னோவை […]
லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு. லக்னோவின் சின்ஹாட்டில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஆக்ஸிஜன் நிரப்பும் போது சிலிண்டர் வெடித்தது. இதன் காரணமாக அங்கு பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர், 2 பேர் உயிரிழந்துவிட்டனர். அதே நேரத்தில் பல தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காயமடைந்த அனைவரும் கோம்டிநகரில் உள்ள லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சிலிண்டர் வெடிப்பின் போது அங்கு சுற்றியுள்ள பகுதியும் அதிர்ந்தது. விபத்து நடந்த […]
கள்ள சாராய வழக்கின் கீழ் காவல் துறை உட்பட 4 பேரை இடைநீக்கம் செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு. உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நவம்பர் 13 ஆம் தேதி, 6 பேர் கள்ள சாராயம் அருந்தி உயிழந்தனர் மற்றும் பலர் இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று உத்தரபிரதேச முதலமைச்சர் இந்த கள்ள சாராயம் விற்ற வழக்கில் சிக்கிய துணை கமிஷனர் உட்பட 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து திடீர் நடவடிக்கை எடுத்தார் யோகி ஆதித்யநாத்.