எல்லையில் உள்ள இராணுவ வீரர்களுக்காக 10 வருடங்களாக விநாயகர் சிலை வாங்கிய பெண்..!

செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு  முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் காஷ்மீர் பூன்ச் மாவட்டத்தை  சார்ந்த கிரண் இஷ்ஹெர்

செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு  முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் காஷ்மீர் பூன்ச் மாவட்டத்தை  சார்ந்த கிரண் இஷ்ஹெர்  என்பவர் தற்போது மும்பையில் உள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  தனது சொந்த ஊரான பூஞ்ச் மாவட்டத்தில்  விநாயகர் சதுர்த்தியை கொண்டாட  மும்பையில் இருந்து மூன்று பிரமாண்டமான  விநாயகர் சிலைகளை வாங்கி உள்ளார்.

இந்த விநாயகர் சிலையின் உயரம் 6.5 அடி கொண்டது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் விநாயகர் சதுர்த்தியை  கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பிள்ளையார் சிலை வாங்கி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த சேவையை கிரண் இஷ்ஹெர்  செய்து வருகிறார்.