இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராணுவ தினத்தை முன்னிட்டு நமது துணிச்சலான, மரியாதைக்குரிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். இந்திய ராணுவம் அதன் துணிச்சலுக்கும், நேர்த்திக்கும் பெயர் பெற்றது. தேசத்தின் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவம் […]
வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 3 இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் 20 லட்சம் காசோலை வழங்கியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த மூன்று படைவீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் வைத்து கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி உள்ளார். இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் சேர்ந்த படைவீரருக்கு ஏகாம்பரம் அவருடைய மனைவி குமாரி அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி […]
ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாயை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார். மதுரையை சேர்ந்த பாலமுருகன், கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ், குமரியை சேர்ந்த ஆனந்த், திருப்பத்தூரை சேர்ந்த சபரிநாதன் ஆகிய 4 ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.
கென்யாவில் 23 ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டில் வழக்கமான பயிற்சிக்காக ஹெலிகாப்டர் ஒன்று தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 23 ராணுவ வீரர்கள் இருந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் நைரோபியில் புறநகர் பகுதியில் காலை 8 மணி அளவில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. திடீரென ஹெலிகாப்டர் தீப்பிடித்து […]
கல்வான் பள்ளத்தாக்கின் முதலாம் ஆண்டு நினைவு குறித்து,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,”இறுதி மூச்சு வரை, நாட்டைப் பாதுகாத்த,நமது வீரர்களின் அழியாத தியாகத்திற்கு இந்த நாடு என்றென்றும் கடன்பட்டிருக்கும்” என்று ட்வீட் செய்துள்ளார். இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்,கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனால்,அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தியபோது,இருதரப்பு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். எனினும்,உயிரிழந்த சீன வீரர்களின் […]
பஞ்சாபில் உள்ள 5 பள்ளிகளுக்கு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் போராட்டங்களில் கலந்துகொண்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களை கவுரவிக்கும் வண்ணம் முக்கியமான சாலைகள், பள்ளிகள் அல்லது பொது இடங்களுக்கு வீரர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கம். அது போல தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது. இது குறித்து பஞ்சாப் மாநில […]
தீபஒளி திருநாளில் எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுக்காக விளக்கேற்றுங்கள் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். நாடு முழுவதிலும் இன்று தீபாவளித் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில இடங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதற்கு மக்கள் நலன் கருதி அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும், பல இடங்களில் மக்களின் சந்தோஷத்திற்காக பாதுகாப்புடன் சில கட்டுப்பாடுகளை அறிவித்து அரசு அனுமதித்துள்ளது. மக்கள் மிக மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி வரக்கூடிய இந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி […]
லடாக்கில் கால் பதிக்க நினைத்த சீனாவை மடக்கி சரியான பாடம் புகட்டிய இந்திய ராணுவத்தின் அதிரடி செயல்களை கண்டு வாய் மட்டுமின்றி அனைத்தையும் அடைத்து கொண்டு உள்ளது சீனா ,லடாக்கில் சீனாவின் மூக்குடைபட்டும் திருந்த வில்லை. இந்தியாவிற்கு குடைச்சல்களை எவ்வாறு எல்லாம் கொடுக்கலாம் என்றே திட்டம் தீட்டி வருகிறது.ஒரு புறம் பாகிஸ்தானை தூண்டி விடுகிறது.மறுபுறம் நட்பு நாடாக இருந்துவந்த நேபாளத்தை அண்மை காலமாக மன கசப்பு ஏற்படுத்தும் படியான செயல்களில் ஈடுபடுத்து வருகிறது. இவ்வாறு குடைச்சல்களை கொடுத்தாலும் […]
இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்ததாக குளோபல் டைம்ஸ் தலையங்கம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-சீன எல்லையில் தொடர்ந்து படைகளும்,ஆயுத தளவாடங்களும் குவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பலகட்ட பேச்சு வார்த்தைகளும் இருநாட்டுக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் இந்திய வீரர்கள் மலைகளில் இருந்து உருண்டும் ஆறுகளில் விழுந்தும் மரணமடைந்ததாகவும்,இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்தாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனாவின் அரசு ஊடகமாக செயல்பட்டு வரும் குளோபல் டைம்ஸ் கால்வன் மோதல் குறித்து ஒரு தலையங்கம் […]
லடாக்கில் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் அங்கு ஆய்வுகள் மேற்கொண்ட பிரதமர் மோடி, லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என உரையாற்றினார். இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் இன்று […]
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்தனர்.ஆனால் சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை . இதற்கிடையில் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.முப்படைகளின் தலைமை தளபதி […]
மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அங்கு தங்கியிருந்த அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் 20 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆம் தேதி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக அத்திக்கரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையி பாதிக்கப்பட்டவர்களை கடற்படை தளத்தில் உள்ள […]
காஷ்மீரில் தற்போது கடும் பனி பொழிந்து வருகிறது. கடும் பனி பொழிவை பொருட்படுத்தாமல் கர்ப்பிணி பெண்ணை 8 கி.மீ சுமந்து சென்று 2 உயிர்களை இராணுவ வீரர்கள் காப்பாற்றினார். காஷ்மீரில் தற்போது கடும் பனி பொழிந்து வருகிறது.இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் கடும் பனி காரணமாக வாகன போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால் அங்கு பனியால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்டதால் அப்பெண்ணை மருத்துவமனைக்கு […]
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் உள்ளது. நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் முகாமிற்கு அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 8 வீரர்கள் வரை சிக்கியிருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்களை மீட்புக்குழுக்கள் மூலம் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் காஷ்மீர் பூன்ச் மாவட்டத்தை சார்ந்த கிரண் இஷ்ஹெர் என்பவர் தற்போது மும்பையில் உள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது சொந்த ஊரான பூஞ்ச் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மும்பையில் இருந்து மூன்று பிரமாண்டமான விநாயகர் சிலைகளை வாங்கி உள்ளார். இந்த விநாயகர் சிலையின் உயரம் 6.5 அடி கொண்டது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் […]
அமர்நாத் யாத்திரை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து காஷ்மீரில் இராணுவ வீரர்களை தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரோ இடத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதை தொடந்து அங்கு பயங்கரவாதிகளுக்கும் , இராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் இறந்தார்.மேலும் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில் ஜெய்ஷ்-இ -முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் […]
காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததுடன், இருவர் பனிக்குள் சிக்கியுள்ளனர். குப்வாரா மாவட்டம் டாங்தர் பகுதியில் நேற்று பிற்பகலில் ராணுவ வீரர்கள், எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் பொறியாளர் என 9 பேர், வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பனிச்சரிவு ஏற்பட்டு வாகனம் முழுவதையும் மூடியது. உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், பனிச்சரிவுக்குள் சிக்கி இருந்த 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் துர்திருஷ்டவசமாக பனிச்சரிவில் […]