நிபா வைரஸ் : கேரள மாநிலத்தில் 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு நிபா வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் மற்றும் குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் என மக்களை அச்சமடைய செய்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் தாக்கிய 14 […]
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைத் தாண்டிய 21 வயது மதிப்புத்தக்க பாகிஸ்தான் இளைஞரை ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் BSF கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 21 வயதான பாகிஸ்தான் இளைஞர் சமூக ஊடகங்கள் மூலம் நட்பாக பழகிய மும்பை பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது காதலியை சந்திக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர் சனிக்கிழமை இரவு ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்திற்கு அருகே இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது எல்லைப் பாதுகாப்புப் படை போலீசார் அந்த […]
கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக எல்லையில் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும், கோவையில் தொற்று பாதிப்பு எதிர்பார்த்த வகையில் குறையாத காரணத்தால், கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றது. கேரளாவை ஒட்டியுள்ள 13 தமிழக எல்லைகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து […]
சவூதி அரேபியாவில் இயங்கி வந்த விமானங்கள் எல்லைகளை திறக்க தாமதப்படுத்துவதால் மீண்டும் இயக்கத்தை நிறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல பகுதிகளிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாக்கியதை அடுத்து, விமானங்கள் போக்குவரத்துகள், தொழிற்சாலைகள் மற்றும் அணைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்ட நிலையில் தான் இருந்தது. சில மாதங்களாக தான் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையும், மக்களின் நிலையையும் நினைத்து அரசாங்கம் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதிலொன்றாக விமானங்கள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியாவிலும் விமானங்கள் […]
நிவர் புயல் காரணமாக விபத்துகளை தடுக்க தமிழக – புதுச்சேரி எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கடலோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் சேதங்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல இடங்களில் நிவாரண பொருட்களுடன் தயாராக உள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் புதுப்பித்து எனும் இரு மாவட்டங்களையும் […]
இந்தியாவின் எல்லைகளில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக ராஜ்யசபாவில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஏற்பாடுகளுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோக்சபாவில் செவ்வாய்க்கிழமையன்று சீனாவின் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் எல்லையில் சீனா ஏப்ரல் மாதம் முதல் எப்படி […]
வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்படும் இரு நாட்டு அச்சுறுத்தலை இந்தியா ஒரே நேரத்தில் முறியடிக்கும் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா இடையே கடந்த மே மாதம் முதல் லடாக்கில் பகுதியில் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. பின்னர் பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் […]
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்திற்குள் நுழைய 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ தயாராக இருப்பதாக, மூத்த ராணுவ ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து துணை ராணுவப்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் அளித்த பேட்டியில், எல்லையில் பயங்கரவாதிகள் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நவ்காம் என்ற இடத்தில் நுழைய தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தான் அந்த இடத்தில் நமது வீரர்கள் இருந்தனர். அப்போது, அங்கு அமைக்கப்பட்டு உள்ள இரும்பு வேலி வழியாக நுழைய முயன்ற […]
இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபாணி, லிம்பியதுரா உள்ளிட்ட பகுதிகளை தனது நாட்டு எல்லையுடன் சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் வெளியிட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவ இந்தியா – சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை பிரச்னை கடந்த 1962ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. இதேபோல், இந்தியா-நேபாளம் இடையேயான எல்லை பிரச்னையும் பல ஆண்டாக தீர்க்கப்படாமலேயே உள்ளது. காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. ஆனால் அந்த பகுதிகளை […]
கேரளாவிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் தமிழக எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள தமிழகர்கள் 3 பேர் கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் ஆம்புலன்சில் வந்த 3 பேரும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று ஊரடங்கு பின்பற்றி வரும் நிலையில், பல விஷயங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்த வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில், நாளை முதல் மார்ச் 31ம் […]
எல்லைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் இருவரை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். 21 வயது இளம் ராணுவவீரர் சுக்வீந்தர் சிங் வீரமரணம் அடைந்தார். இந்திய பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடும் வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆண்டு முழுவதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த […]
எல்லையில் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது என்று இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.எல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடு உள்ளது.எல்லையில் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது. பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒடுக்குவதில் ராணுவம் […]
செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் காஷ்மீர் பூன்ச் மாவட்டத்தை சார்ந்த கிரண் இஷ்ஹெர் என்பவர் தற்போது மும்பையில் உள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது சொந்த ஊரான பூஞ்ச் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மும்பையில் இருந்து மூன்று பிரமாண்டமான விநாயகர் சிலைகளை வாங்கி உள்ளார். இந்த விநாயகர் சிலையின் உயரம் 6.5 அடி கொண்டது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் […]
நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை போது இந்தியா -பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டரி வாகா பகுதியில் உள்ள இரு நாட்டின் பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பை பரிமாற்றி கொள்வது வழக்கமாக நடப்பது. ஆனால் இன்று இரு நாட்டின் பாதுகாப்பது படை வீரர்கள் இனிப்பை பரிமாற்றி கொள்ள வில்லை.எல்லை பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைவீரர்கள் இனிப்பு கொடுக்க தயாராக இருந்தாலும் அதை வாங்க பாகிஸ்தான் […]
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர மாநில அரசு கடந்த 7ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. தமிழக ஏழைக்கு வந்த நீரை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர் இந்த நீர் இன்று மாலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின்படி ஜூன் முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் […]
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இரு மாநில அரசு பேருந்துகளின் இயக்கம் முடங்கியதால் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர். கேரளா அரசு […]
எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் கே.கே.சர்மா பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதி முழுவதும் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் வேலியமைத்துப் பாதுகாப்புப் பலத்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – வங்கதேசம் இடையிலான எல்லையில் பல இடங்களில் வேலி அமைக்கப்படாமல் உள்ளதால் வேறு நாட்டவர்களும் தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது. போதைப்பொருள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் கடத்துவதற்கும் வாய்ப்பாக உள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில் ஐந்தாண்டுகளுக்குள் இரு நாடுகளுடனான எல்லைப் பகுதி முழுவதும் […]
ஜம்மு காஸ்மீரில் தற்போது கடும் பனிபொழிவு பெய்துவருகிறது. இதனால் அங்கு எல்லையில் வேலை பார்க்கும் ரானுவ வீரர்கள் கடும் அவதிக்கு உட்படுகின்றனர். பண்டிபோரா எல்லை பகுதியில் எல்லை கட்டுபாட்டு கோட்டின் குரேஸ் செக்டரில் பணிசரிவு ஏற்பட்டது. இந்த சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளார். மயமான ராணுவ வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக மற்ற இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.