ஆவிகளுடன் பேசிய மனைவி? சந்தேகப்பட்டு கொடூரமாக கொலை செய்த கணவன்!!

ராஜஸ்தான் : மாநிலத்தில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவி தொலைபேசியின் மூலம் ஆவிகளுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில் லால் என்பவர் தனது மனைவி தேவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தேவி, லால் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளும் செவ்வாய்க்கிழமை அன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது, புதன்கிழமை 2:30 மணியளவில் மனைவி தேவி ஆவிகளுடன் தொலைபேசியின் மூலம் பேசுவதாக லாலுக்கு சந்தேகம் வந்துள்ளது. பின் தூங்கி கொண்டு இருந்த மனைவி தேவி யை கோடரியை வைத்து தாக்கி கொடூரமாக கொலை செய்தார். தாயின் அலறல் சத்தம் கேட்டு, தம்பதியரின் 17 வயது மகள் சுமித்ரா தந்தை லாலை தடுக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் , லால் கொடூரமாக தாக்கி கொண்டு இருந்தார். இதனால் மகள் சுமித்ராவுக்கும் காயம் ஏற்பட்டது .
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, தாய்-மகள் இருவரும் பலத்த காயம் அடைந்து கீழே கிடைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, காவல்துறையினருக்கு இந்த சம்பவம் குறித்த தகவலை தெரிவித்துவிட்டு பாதிக்கப்பட்ட தேவி மற்றும் சுமித்ராவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவலை தெரிவித்தார்கள். சுமித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொலைபேசியின் மூலம் ஆவிகளுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமித்ரா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் லாலை கைது செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025