4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்..! அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோ..!

சத்தீஸ்கர் : மாநிலம் ராய்பூரில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் (housing board accountant) ஒருவர் திடீரென அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து

Jumps To Death

சத்தீஸ்கர் :மாநிலம் ராய்பூரில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் (housing board accountant) ஒருவர் திடீரென அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராய்பூரில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் சிசிடிவி வீடியோவில், நரேஷ் சாஹு என்ற கணக்காளர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வைரலாகி வரும் வீடியோவில் வீட்டுவசதி வாரிய கணக்காளர்  ஒருவர் வேகமாக யோசித்து கொண்டு வருகிறார்.

பிறகு திடீரென வேதனையுடன் வேகமாக அங்கிருந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து  கீழே குதித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வைத்தனர்.

திடீரென  வீட்டுவசதி வாரிய கணக்காளர் தற்கொலை செய்து  கொண்ட நிலையில், இதற்கு காரணம் என்ன? அவருடைய தற்கொலைக்கு தூண்டிய விஷயம் என்னவென்ற காரணம் குறித்த தகவலை  போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் நரேஷ் சாஹு என அடையாளம் காணப்பட்டார்.

unknown node