டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!

டெல்லி : இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தில் இன்று காலை மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காலையில் பெய்த மழை காரணமாக விபத்து நடந்ததாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
மேற்கூரை ஷீட் தவிர, சப்போர்ட் பீம்களும் இடிந்து விழுந்ததால், டெர்மினலின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியதாகவும், அதில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்தது.
தற்பொழுது, மீட்கப்பட்ட மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, விபத்து காரணமாக முதல் முனையத்தில் விமான புறப்பாடு மட்டும் மதியம் 2 மணிவரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025