சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதுவிமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலாதுறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் மக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரமும், நலன்களும் எந்தவகையிலும் […]
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது. பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் மக்களை சந்திக்க அவர் செல்ல திட்டமிட்டிருந்தார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அங்கிருக்கும் கிராமத்தினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்க கோரியும், […]
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதலே அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதிகனமழையும், சூறைக்காற்றும் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, நிர்வாக காரணங்களால் 9 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஆனால்திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, தற்போது மதுரையில் தரையிரங்க வேண்டிய 2 விமானம் வானில் வெகு நேரமாக வட்டமடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பெங்களுருவில் மற்றும் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த 2 இண்டிகோ விமானங்கள் தரையிறங் வேண்டிய நிலையில் கனமழை அங்கு பெய்து வருவதால் பாதுக்காப்பு காரணமாக வானில் வெகு நேரமாக வட்டமடித்து வருகிறது என தகவல் தெரியவந்துள்ளது. […]
டெல்லி : இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தில் இன்று காலை மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காலையில் பெய்த மழை காரணமாக விபத்து நடந்ததாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. மேற்கூரை ஷீட் தவிர, சப்போர்ட் பீம்களும் இடிந்து விழுந்ததால், டெர்மினலின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியதாகவும், அதில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் […]
விமான சேவை : சென்னையில் சூறைக் காற்று மற்றும் கனமழை காரணமாக விமான சேவைகள் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணியளவில் இடி மின்னலுடன் தொடங்கிய கனமழை இரவு முழுக்க […]
சென்னை : காஞ்சிபுரத்தில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 147.11 ஏக்கர் நிலம் (67 ஹெக்டேர்) கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான நிலம் எடையார்பாக்கம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆட்சேபனை […]
சென்னை : சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் இரவு மற்றும் அதிகாலை என 2 மின்னஞ்சல் மூலமாக வந்த மிரட்டலில், 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாம். இந்நிலையில், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து, அலர்ட்டான போலீசார் இன்று அதிகாலை விமான நிலையத்தில், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு […]
தஞ்சையில் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சிறுநகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து முதற்கட்டமாக 20 இருக்கைகளுடன் விமான சேவை தொடங்கப்படுகிறது. 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை – சென்னை விமான சேவை பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் […]
பண்டிகை காலம் விடுமுறையால் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு. பண்டிகை காலம் விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. இந்த சமயத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமாக ரூ.3,500 கட்டணம், தற்போது ரூ.10,000 முதல் ரூ.19,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்துக்கு வழக்கமாக ரூ.5,150 விமான கட்டணம், தற்போது ரூ.12,000 முதல் ரூ.21,000 […]
சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் சீரடிக்கு செல்லும் 4 விமான சேவைகள் ரத்து. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு செல்லும் 11 விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு தூத்துக்குடி செல்லும் விமானம், பிற்பகல் 2.25 மணிக்கு சீரடி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் […]
நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம். நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், டிசம்பர் 6-ஆம் தேதி நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என […]
ஹைதராபாத் விமான நிலையத்தில் 7 பயணிகளிடம் ₹11 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. 11 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட 100 இ-சிகரெட்டுகள் ஆகியவற்றை கடத்த முயன்ற ஏழு பயணிகளை ஹைதராபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில், பஹ்ரைன் மற்றும் துபாயில் இருந்து இந்தியாவுக்குச் சென்ற பயணிகளின் பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர்கள் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் […]
திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள். திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சிக்கு வந்த விமானங்களில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், 60 விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 55 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்கைட்ராக்ஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமானநிலையங்கள் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. ஸ்கைட்ராக்ஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமானநிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த 100 விமான நிலையங்களின் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இந்த பட்டியலில், டெல்லி விமான நிலையம் கடந்த ஆண்டு 45வது இடத்தில் இருந்து 37வது இடத்தில் உள்ளது. பெங்களூரு விமான நிலையம் 2021 இல் 71 வது […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இதனையடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் அடையாறு செல்லும் அவர், அங்கிருந்து நேரு ஸ்டெடியத்திற்க்கு சென்று புதிய […]
அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து செல்லு 10 விமானங்கள் இன்று ரத்து. வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் […]
குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்த தஞ்சை பயணியை காவல்துறை கைது செய்துள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயணி சேவியர் என்பவர் புகை பிடித்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் புகை பிடித்தற்கு சக பயணிகள் கடும் ஆட்சபனை தெரிவித்துள்ளனர். சக பயணிகளின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் தஞ்சை பயணி புகை பிடித்துள்ளார். விமானம் சென்னையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் சேவியரை போலீசில் ஒப்படைத்தனர். இதன்பின் தஞ்சை பயணி சேவியரை கைது செய்து விமான நிலைய போலீஸ் […]
போதைப் பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து 113 கோடி மதிப்புள்ள ஹெராயின் எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஆர்ஐ அதிகாரிகள் 2 பேர் கென்யாவில் இருந்து வந்த ஆண், பெண் பயணி மற்றும் ஒரு மல்லாவி […]