டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி தீபக் ஹூடா, சக மல்யுத்த வீரர், உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் வினேஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வினேஷ் போகத் தகுதி நீக்கம் ..! பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் இந்த ஆண்டு கோலாகலமாக ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வந்தது. இதில் 50.கி […]
மைக்ரோசாப்ட் : உலகம் முழுவதும் விண்டோஸ் 11 இயங்குதளம் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் கணினி முகப்பு திரையில், “உங்கள் கணினி சிக்கலில் உள்ளது. நாங்கள் அதற்கான புகார்களை சேகரித்து வருகிறோம். நீங்கள் உங்கள் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்துகொள்ளுங்கள் ” என நீல நிற திரை காண்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுக்க பல்வேறு கணினி பயனாளர்கள், பிரதான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாங்கள் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. […]
குஜராத் : கடந்த சில நாட்களாகவே டெல்லி, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக குஜராத்தின் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் இருந்த மேற்கூரை திடீரென கீழே இடிந்து விழுந்தது. ஏற்கனவே. கனமழை காரணமாக ,டெல்லி, ஜபல்பூர் விமான நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இன்று ராஜ்கோட் விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விழுந்து […]
டெல்லி: தென்மேற்கு பருவமழையானது மேற்கு, கிழக்கு ராஜஸ்தான், ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகள் மற்றும் டெல்லி மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. நேற்றிரவு பெய்ய தொடங்கிய கனமழையால் டெல்லி மாநகர் முழுவதும், பல்வேறு பகுதிகள் மழைநீரால் மூழ்கியுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரையில் மூன்று மணி நேரத்தில் சுமார் 150 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மழையளவு பதிவாகியுள்ளது. கடந்த 24 […]
டெல்லி : இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தில் இன்று காலை மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காலையில் பெய்த மழை காரணமாக விபத்து நடந்ததாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. மேற்கூரை ஷீட் தவிர, சப்போர்ட் பீம்களும் இடிந்து விழுந்ததால், டெர்மினலின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியதாகவும், அதில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் […]
சென்னை : 110 நாட்களில் சுமார் 200 விமானங்களில் பயணம் செய்து பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட வந்த நபரை டெல்லி போலீஸ் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு உள்ளூர் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தன்னிடம் இருந்த 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை தொலைத்து இருந்தார். அதே போல கடந்த பிப்ரவரி மாதம் அமிர்தரஸில் இருந்து டெல்லிக்கு பயணித்த பயணி ஒருவர் 20 லட்சம் மதிப்புள்ள நகைகளை இழந்தார். […]
Bomb Threats : இந்தியா முழுக்க13 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஜெய்ப்பூர், பீகார் , ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 13 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நேற்று மாலை 3 மணி அளவில் மிரட்டல் செய்தி வந்துள்ளது. இ-மெயில் மூலமாக மத்திய பாதுகாப்பு படையினருக்கு (CSIF) இந்த மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து லக்னோவில் உள்ள சவுத்ரி சரண்சிங் சர்வதேச […]
தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திலிருந்து இன்று ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் லோகோ ஒட்டப்பட்ட ஒரு கார், இண்டிகோ விமானத்தின் மூக்குப் பகுதிக்குக் கீழே வந்து நின்றது. விமானத்தின் மூக்கு சக்கரத்தில் மோதியதில் இருந்து கார் சிறிது நேரத்தில் தப்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கார் எப்படி அங்கு வந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், காரை ஓட்டியவர் தவறுதலாக அந்த இடத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்றதாக அந்த வீடியோவில் […]
டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் இருந்து எஸ்.ஜி.11 எனும் விமானம் இன்று புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இண்டிகேட்டர் சரியாக வேலை செய்யவில்லையாம். அதாவது, எரிபொருள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை குறிக்கும் கருவி சரியாக வேலை செய்யாத காரணத்தால் எரிபொருள் வேகமாக குறைந்து கொண்டே வருவது போல தெரிந்துள்ளளது. இதனை அறிந்த விமானி உடனடியாக […]
டெல்லி விமான நிலையத்தில் வாயில் 951 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். துபாயிலிருந்து வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த இருவர் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரது வாய்களிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் இவர்களிடமிருந்து ஒரு உலோக சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள காவலர்கள், இவர்களது வாய் குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் 951 கிராம் […]
ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு திரும்பிய பிவி சிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை 21-13, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் கிடைத்தது. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார் என்பது […]
டெல்லி விமான நிலையத்தில் அக்டோபர் 1 முதல் டி2 முனையத்தில் விமானங்கள் மீண்டும் தொடங்க உள்ளது. டெல்லி விமான நிலையம் ஆறு மாதங்கள் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 1 முதல் டி 3 முனையத்திலிருந்து விமானங்களை மீண்டும் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயால் மார்ச் 23 முதல் டி 3 முனையத்திலிருந்து குறைந்த விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், டி 2 முனையத்தில் ஒரு நாளைக்கு 96 விமானங்கள் இயக்கப்படவுள்ளது. அதில், 48 விமானம் போகிறது மற்றும் […]
வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல இடங்களில் பரிசோதனை மையங்களும், தேவையான கட்டுபாட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படுவார்களாம். பரிசோதனையில் நெகட்டிவாக இருந்தால் அவர்கள் கட்டாயமாக ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் […]
டெல்லி விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பையில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவல் அறிந்து விமான நிலையத்திற்கு வந்த போலீசார் அந்த பையை சோதனையிட்டனர்.அதில் மின்சார வயர்கள் இருப்பதை அறிந்த அவர்கள் உடனே வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து சோதனை மேற்கொண்டனர். அந்த பையில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் அந்த பை அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு […]