போலி ஆதார் மூலம் பயணம் செய்த 24 மியான்மர் நாட்டவர்கள் கைது...!

Twenty-four Myanmar nationals have been arrested, including 14 women who traveled by fake Aadhar.

போலி ஆதார் மூலம் பயணம் செய்த 14 பெண்கள் உட்பட 24 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலம் தென்னவுபல் எனும் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ எல்லையில் பயணம் செய்து கொண்டிருந்த சிலரை, குதேங்தாபியில் பகுதி ராணுவத்தினர் சோதனைச் சாவடியில் வைத்து  வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் போலியான ஆதார் கார்டு மூலமாக பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அசாம் ரைபிள்ஸ் படையினர் அவர்கள் 24 பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 14 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இவர்கள் 24 பேரையும் கைது செய்த மோரே காவல் நிலைய போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.