Earthquake : மியான்மரில் 4.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக NCS தெரிவித்துள்ளது. நேற்று (ஏப்ரல் 28) ஞாயிற்று கிழமை பிற்பகல் 2 மணியளவில் மியான்மர் நாட்டின் சீன எல்லை ஒட்டிய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையமான NCS (National Center for Seismology) தகவல் தெரிவித்துள்ள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவானதாக கூறப்பட்டுள்ளது. பூமத்திய அட்சரேகை 25.39 மற்றும் தீர்க்கரேகை 96.06 இல் நிலமட்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் […]
மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 14 பேரில் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர். தற்பொழுது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லெங்புய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிசோரம் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 10.19 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தரையிறங்குவதில் பல்வேறு சவால்கள்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தகவலின்படி, மியான்மர் இராணுவத்திற்கும் சிவிலியன் இராணுவத்திற்கும் இடையிலான […]
கடந்த 24 மணி நேரத்தில் நேபாளம், மியான்மர், காஷ்மீர், என இந்தியா மற்றும் எல்லையையொட்டி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை நேபாளத்தில் 5.3 என்ற அளவிலும், மாலை 4.3 என்ற அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்றிரவு 10.56 மணிக்கு ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவு ஆகியுள்ளது. இன்று காலை 2 மணிக்கு மணிப்பூரிலும் 3.5 என்ற அளவிலும், மணிப்பூர் எல்லையை […]
மியான்மரில் சிக்கிய 13 தமிழர்கள் முதலமைச்சர் கோரிக்கையினால் மீட்பு. தாய்லாந்துக்கு வேலைக்காக சென்று மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களில் 13 பேர் மீட்டு தமிழகம் அழைத்துவரப்படுகிறார்கள். தமிழகள் 13 பேர் விமானம் மூலம் தமிழகம் வரவுள்ளனர். தாய்லாந்துக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழகர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட தமிழர்கள் இன்றிரவு 8 மணிக்கு […]
மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகியின் ஆட்சி கடந்தாண்டு கலைக்கப்பட்டு, மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின் வீடு காவலில் வைக்கப்பட்டிருந்த சூகி மீது 11 ஊழல் குற்றச்சாட்டு புகார் உள்ளது. இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற ஒருவருக்கு எதிரான வழக்கில் 600000 டாலர் பணம் பெற்றதாக சூகி மீதுள்ள புகார் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி அந்நாட்டு நீதிமன்றம் மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் சூகிக்கு எதிராக […]
மியான்மர்:தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும்,மேலும் ஆட்சியில் இருந்தபோது தொழில்நுட்ப சட்டம்,ரகசிய தகவல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறி ஆங் சான் சூகிக்கு இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
போலி ஆதார் மூலம் பயணம் செய்த 14 பெண்கள் உட்பட 24 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம் தென்னவுபல் எனும் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ எல்லையில் பயணம் செய்து கொண்டிருந்த சிலரை, குதேங்தாபியில் பகுதி ராணுவத்தினர் சோதனைச் சாவடியில் வைத்து வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் போலியான ஆதார் கார்டு மூலமாக பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. […]
மியான்மர் நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இப்பகுதியிலிருந்து 82 கிமீ தொலைவில் பூமிக்கு அடியில் மையம் கொண்டு இருந்துள்ளது. மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
மியான்மரிலிருந்து பங்காளதேஷ் வரை தனது பெற்றோர்கள் இருவரையும் 7 நாட்களாக தோள் கூடையில் வைத்து சுமந்து சென்ற மகன். மியான்மரை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது பெற்றோர் இருவரும் வயதான நிலையில் இருந்ததால், அவர்களை நடத்தி கூட்டி வர முடியாது என்பதற்காக, தனது தோள் பட்டையில் கம்புகளை வைத்து இருபுறமும் கூடை கட்டி, அதில் தனது வயதான பெற்றோர்கள் இருவரையும் வைத்து சுமந்து வந்துள்ளார். மியான்மரிலிருந்து பங்களாதேஷ் வரை 7 நாட்கள் இவர்கள் இருவரையும் இந்த இளைஞன் […]
மியான்மரில் வன்முறையால் 1,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல். பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்கள் நடத்தியதால் அவர்கள் இடம் பெயர்வதற்கு காரணம் என கூறப்பப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று மியான்மரின் கயா மாநிலத்தில் 1,00,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மீது “பாதுகாப்புப் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்கள்” அவர்கள் இடம் பெயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் “மியான்மரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அங்கு விரைவாக […]
மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹஸ்வீ கிராம மக்கள் 20 பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட […]
மியான்மரில் செயற்கைகோள் தொலைகாட்சிக்கு தடை. இணையம் மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக்கப்பட்டு, பின் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மரில் உள்ள ஜனநாயக குரல் பர்மா […]
ராணுவத்தின் சட்ட விரோத மற்றும் மிருகத்தனமான முயற்சி ஒருபோதும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம், நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மீண்டும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி நிலையில், இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேலும் ஆங்சாங் சுகி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ராணுவத்தினரால் சிறை வைக்கப்பட்ட நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது. இந்தப் போராட்டத்தை இராணுவத்தினர் […]
மியான்மரில் ராணுவ ஆட்சி மாற்றப்பட்டதில் இருந்து இதுவரை 740 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே […]
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய கட்சி வெற்றி பெற்றது. அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததை தொடர்ந்து, ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. பின்னர் ஆங் […]
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் நேற்று ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உட்பட 114 பேர் உயிரிழந்தனர். மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய கட்சி வெற்றி பெற்றது. அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததை தொடர்ந்து, ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் வெற்றி பெற்ற ஆங் […]
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை சுமார் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஐ.நா சபை தூதர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பரில் மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய கட்சி வெற்றி பெற்றது.ஆனால் அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததை தொடர்ந்து ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது . அதன் பின் கடந்த பிப்ரவரியில் வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியின் கட்சியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்து […]
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி ,அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மியான்மரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தது ராணுவம்.மேலும் மியான்மரில் உள்ள ஆங் சான் சூச்சி ,அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தேர்தல் முறையாக நடைபெற்ற பின்னர் ஆட்சி திரும்பி அளிக்கப்படும் என்று ராணுவம் தரப்பில் தகவல் […]
மியான்மரில் போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க வரும் 7ஆம் தேதி வரை முகநூல் பயன்பாட்டுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது. மியான்மரில் ராணுவத்திற்கும், அந்நாட்டின் அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தற்போது ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து, அங்கு சமூகவலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க வரும் 7ஆம் தேதி வரை முகநூல் பயன்பாட்டுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது. மேலும், அந்நாட்டு அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு இணையதள சேவை வழங்குனர்களால், முக […]
மியான்மர் நாட்டில் உள்ள மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் பணியாளர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கிருந்த மண் குவியல் தொழிலாளர்கள் மீது விழுந்தது. அந்த விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், அங்கு […]