மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் அவர்கள் தனது 89 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், டாக்டர்.மன்மோகன் சிங்குக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் எதிர்கால பார்வை ஆகியவை தான் இந்தியாவை உயர்நிலையில் நிலைநிறுத்தியுள்ளது.
எங்கள் மக்களுக்கு நீங்கள் செய்த சேவைக்கு நன்றி, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node