பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, இன்று நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுதுபள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகனவரி,சாலைவரிஉள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.