தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா..பாதிப்பு 1,885 ஆக உயர்வு.!

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1, 885 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1, 885 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்படியாக சென்னையில் இன்று 28 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு 523 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 60 பேர் மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,885 பேரில் மொத்தம் 1020 பேர் வைரஸில் இருந்து பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 29,056 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 26 பேர் இருக்கின்றார்கள் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 7,495 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 87,605 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1,885 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

unknown nodeunknown node