தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2,162 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை அங்கு 906 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 48 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் 1,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 27 ஆக உள்ளது.

இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 31,375 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 40 பேர் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். இன்று அதிகபட்சமாக 9,787 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,19,748 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 2,323 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது கொரோனா வார்டில் 1,035 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 1,553 பேர் ஆண்கள் என்றும் 770 பேர் பெண்கள் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 39%, உயிரிழப்பின் விகிதம் 1.16%, குணமடைந்தவர்களின் விகிதம் 54.15 % ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node