தமிழகத்தில் சமூக பரவல் இல்லை – சுகாதர அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவில்

தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது என்று கூறி உள்ளார்.

தமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் இந்நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.