முதல் முறையாக ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா.! பாதிப்பு 2,526 ஆக உயர்வு.!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2323 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 2526 ஆக அதிகரித்துள்ளது. அதுவும், இன்று சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு அங்கு 1082 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 98 வயதுடைய மூதாட்டி கொரோனாவால் சிகிச்சை போலன்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 54 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 9,615 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 1,29,363 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வார்டில் 1,183 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டு கண்காணிப்பில் 33,184 பேர் இருக்கின்றார்கள் என்றும் அரசு கண்காணிப்பில் 40 பேர் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

unknown node