22 வயது ஆண் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார்.
தமிழகத்தில் 2-வது நாளாக இன்றும் 1500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மட்டும் கொரோனாவால் 17 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை, தமிழகத்தில் கொரோனா காரணமாக 286 பேர் இறந்துள்ளனர். இன்று இறந்த 17 பேரில் 22 வயது மதிப்புத்தக்க ஆண் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கொரோனா பாதிப்பால் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளனர். 70% உயிரிழப்பு சென்னையில் தான் நடைபெற்றுள்ளது.