தமிழகத்தில் புதிதாக 669 கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் 6,535 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று 135 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,43,035 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 13,367 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த 669 பேரில் ஆண்கள் 412 பேர், பெண்கள் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா வார்டில் 5,195 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 47 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அங்கு மொத்த எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து செங்கல்பட்டில் மேலும் 43 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது.
unknown node