படுக்கை விவரங்களை StopCorona இணையதளத்தில் பதிவிடப்படும் – தமிழக அரசு

கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை விவரங்களை StopCorona  இணையதளத்தில் பதிவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. படுக்கைகள் அதிகரிப்பு பற்றி விஜயபாஸ்கர் நேற்று 400 தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், படுக்கை விபரங்களை StopCorona  இணையத்தில் பதிவேற்ற மருத்துமனை ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

StopCorona இணையதளம்மூலம் தனியார் மருத்துவமனையில் உள்ள வசதிகளையும், படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் எண்ணிக்கையை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் கிடைப்பதில்லை என வரதராஜன் தெரிவித்தது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

படுக்கை விவரங்களை StopCorona இணையதளத்தில் பதிவிடப்படும் – தமிழக அரசு