கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை விவரங்களை StopCorona இணையதளத்தில் பதிவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. படுக்கைகள் அதிகரிப்பு பற்றி விஜயபாஸ்கர் நேற்று 400 தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், படுக்கை விபரங்களை StopCorona இணையத்தில் பதிவேற்ற மருத்துமனை ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]