மாரடைப்பை தடுக்கும் சூப்பரான பத்து உணவுகள் எது தெரியுமா?

Heart attack-ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் இருக்கவும் இருதயம் பாதுகாக்க கூடிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காண்போம்.

heart health food

Heart attack-ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் இருக்கவும் இருதயம் பாதுகாக்க கூடிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காண்போம்.

மாரடைப்பு;

மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதி செயல் இழக்கப்பட்டு கடுமையான நெஞ்சு வலியை ஏற்படுத்துகிறது இதுதான் மாரடைப்பு ஆகும்.

சமீப காலத்தில் இளம் வயதினருக்கு கூட இந்த பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மன அழுத்தமும், உணவு பழக்க வழக்கமும் தான். என்னதான் உடற்பயிற்சியை மேற்கொன்றாலும் முறையற்ற நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

பச்சை காய்கறிகள்;

கீரைகள் ,ப்ரோக்கோலி, குடமிளகாய் போன்றவற்றில் விட்டமின் சி, போலேட், பி காம்ப்ளக்ஸ் விட்டமின் ,ஆன்ட்டி ஆக்சிடென்ட் ,பாலிபினால் என இருதய ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பு படிவதை தடுக்கிறது.

பெர்ரி பழவகைகள் ;

ஸ்ட்ராபெரி ,ப்ளூபெர்ரி,  போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்  ,பாலிப்பினால்  இருப்பதால் ரத்தக்குழாய்களில் ஏற்படும் இன்புளமேசனை குறைக்கிறது, ரத்த ஓட்டத்தை சீராகவும் உதவுகிறது.

மீன்கள்;

அசைவ உணவுகளில் மீன் சிறந்த உணவாகும். இதில் ஒமேகா-3 ,ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது இருதயத்தில் உள்ள ட்ரை கிளிசராய்ட் என்ற கொட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. சால்மன், சூரை மீன், மத்தி மீன், கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.

பீன்ஸ்;

சோயா பீன்ஸ் ,கிட்னி பீன்ஸ் ,பிளாக் பீன்ஸ் போன்றவற்றில் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. இது நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தியை அதிகரித்து ரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது என ஆராய்ச்சிகள் கூறுகிறது.

ஆப்பிள்;

இருதய ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் சிறந்த பழமாக கூறப்படுகிறது, இதிலுள்ள கரையும் நார்ச்சத்துக்கள் மற்றும் பாலி பினால்,  ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸால்  இருதயம் பாதிப்படைவதை தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

மாதுளை;

ரத்த நாளங்களில் உள்ள அதிக ரத்த அழுத்தத்தை குறைத்து நரம்புகள் சீராக சுருங்கி விரிய  உதவுகிறது. மேலும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் இன்புளமேசனை தடுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது நல்லதாகும்.

நட்ஸ் வகைகள்  ;

பாதாம் மற்றும் வால்நட்டில் நல்ல கொழுப்பு உள்ளது. மேலும் விட்டமின் இ சத்து அதிகம் இருப்பதால் தினமும் ஐந்திலிருந்து ஆறு எடுத்துக் கொள்வதால் இருதயம் பாதுகாக்கப்படுகிறது.

லவங்கப்பட்டை;

உடல் எடை குறைப்பதற்கும் கொழுப்பை குறைப்பதற்கும் லவங்கப்பட்டை பயன்படுத்தப்படுகிறது .அரை ஸ்பூன் லவங்கை பட்டை பொடியில் தேன் கலந்து சாப்பிடும் போது கொழுப்பு குறைகிறது. இதனால் இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

பூண்டு ;

பூண்டு  ஆலசின் என்ற ஆண்டி ஆக்சிடெண்ட் உள்ளது இது நரம்புகளுக்கு பலம் அளிப்பதோடு ரத்த ஓட்டத்தையும் சீராக்க உதவுகிறது .தினமும் நான்கு பள்ளு  பூண்டு எடுத்துக் கொள்வது சிறந்தது.

வாழைப்பழம்;

வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. பொட்டாசியம் இருதய ஆரோக்கியத்திற்கும் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் சிறந்ததாக கூறப்படுகிறது.

எனவே இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளக்கூடிய உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ளும் போது மாரடைப்பு ஏற்படுவது குறைக்க படும் .

மாரடைப்பை தடுக்கும் சூப்பரான பத்து உணவுகள் எது தெரியுமா?