பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ஊழல்...!அதிர்ச்சியடைந்த விஜயகாந்த்

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்ததாக ஆளுநர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்ததாக ஆளுநர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். நேற்று  சென்னை  திநகரில்  உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை  துணைவேந்தர் நியமனத்தில்  கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.இதை மாற்ற வேண்டுமென நினைத்தேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தகுதிகள் அடிப்படையில்  தான் துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்றும்  நான்  தகுதிகள் அடிப்படையில் 9 துணை வேந்தர்களை நியமித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.இது தமிழக அரசியல் கல்வித்துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

unknown node

ஆனால்  இன்று சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி ஊழல் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், என்னுடடைய நியமனம் தகுதிகளின் அடிப்படையிலே  நடைபெற்றது.விதிமுறைகளின் படியே சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக என்னை அப்போதைய ஆளுநர் வித்யாசாகரராவ் நியமனம் செய்தார்.எனவே எந்தவித ஊழலும் என்னுடைய  நியமனத்தில் நடைபெறவில்லை.இந்நிலையில் ஊழல் தொடர்பாக  தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்ததாக ஆளுநர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.கல்வியா, சீனியாரிட்டியா அல்லது யார் அதிக பணம் கொடுக்கிறார்கள் என்ற அடிப்படையில் நியமனமா? என்றும்  விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.