#Breaking : சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ..!

Holidays have been announced for schools and colleges in Sivagangai district.

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக இன்று நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.