சென்னை: குமரிக்கடலில் நீடித்த தாழ்வு பகுதி லட்சதீவுகள் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என டெல்டா வெதர் மென் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நேற்று முதல் தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எதிரொலியாக இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் […]
சென்னை: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதன் காரணமாக, இன்று (டிச,13) மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், 16ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழையும், 17ஆம் தேதி 3 மாவட்டங்களில் […]
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக அதிகனமழை கொட்டித் தீர்த்ததால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை (டிச.04) அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பங்கேற்னர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், “ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள். ஆதரவற்றோர் […]
சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 17ம் தேதி வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், கனமழை […]
கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை […]
காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக, சமீப நாட்களாக சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை தமிழகத்தில் சமீப நாட்களாக மாண்டஸ் புயலை தொடர்ந்து சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் மாலை 3 மணிக்கு வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக 15 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கட்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நேற்று தமிழகம் முழுவத்துள் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக 15 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், கொடைக்கானலில் சிறுமலை பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. மாண்டஸ் புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றும் கனமழை காரணமாக கடலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரண்மாக 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரண்மாக வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியாக 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை காலை வரை தீவிர புயலாக நகர்ந்து, பின்னர் சற்று வலுகுறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கு இடையே புயல் கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மாமல்லபுரத்திற்கு அருகே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை மொத்தம் 8 மாவட்ட […]
சென்னை, கடலூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை, சென்னை, கடலூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை:வால்பாறையில் இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக கோவை மாவட்டத்தின் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் (ஜுலை 7),நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு விடுத்துள்ளார். மேலும்,தொடர் மழை பெய்து வருவதால் வாகன […]
அரசு ஊழியர்கள் 28, 29ம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முன்னதாகவே,குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி,சில மாவட்டங்களில் கனமழை மற்றும் ஏனைய இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 15 ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வான ஆழித்தேரோட்டம் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த […]
சென்னை:தமிழகத்தில் இன்று ( 22-ம் தேதி ) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,இன்று (22.01.2022) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் […]