தொடர் கனமழை- 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது.மேலும் வெப்ப சலனம் காரணமாக  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது.மேலும் வெப்ப சலனம் காரணமாக  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக திருவாரூர், நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம், குடவாசல், கொரடாச்சேரி ,தேனி ,தஞ்சை,கும்பகோணம்  உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.திருவாருரில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஏற்கனவே கனமழை காரணமாக திருச்சி,அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 3-வது மாவட்டமாக திருவாரூர் மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.