சிறகடிக்க ஆசை சீரியல்.. விஜயாவுக்கு அல்வா கொடுத்த மீனா..!

சென்னை – சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[ஆகஸ்ட் 22] கதைக்களத்தை இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
முத்து மீனாவோட அம்மாவ வீட்டுக்கு போக சொல்லிட்டு சவாரிக்கு கிளம்பிருறாரு. ரோகினி ஷோரூம்ல இருக்காங்க அப்போ அங்க ஸ்கூல் டீச்சர்ஸ் ரெண்டு பேர் வராங்க.. புதுசா ஸ்கூல் பக்கத்துல ஓபன் பண்ணி இருக்கிறோம் அப்படின்னு ஸ்கூல பத்தி சொல்றாங்க.. ரோகினியும் கிரிஷுக்கு ஸ்கூல் தேடிட்டு இருந்ததால ரொம்ப சந்தோசமா ஆர்வமா விசாரிச்சுட்டு இருக்காங்க ..இப்போ மனோஜ் வராரு யாருன்னு கேக்குறாங்க.. அவங்களே நாங்க பக்கத்துல இருக்குற ஸ்கூல் ஸ்டாப்ஸ் அப்படின்னு சொல்றாங்க. எங்களுக்கு தான் குழந்தையே பொறக்கலையே அதுக்கு இன்னும் நாலு வருஷம் ஆகும் அப்படின்னு சொல்றாரு. இப்போ அவங்க ரெண்டு பேரும் ரோகிணியை பார்த்து பரவாயில்லையே மேடம் இப்பவே ஸ்கூல பத்தி விசாரிக்கிறீங்க..
இப்பவே நீங்க நல்ல அம்மாவா நடந்துக்குறீங்க இதுக்காகவே உங்களுக்கு சீக்கிரமா குழந்தை பிறக்கணும் அப்படின்னு வாழ்த்திட்டு போறாங்க.இப்ப மனோஜ் ரோகிணி கிட்ட எப்ப நமக்கு குழந்தை பிறக்கும்னு ஜோசியர் போய் பார்க்கலாம் அப்படின்னு சொல்றாரு.. இதைக் கேட்ட ரோகிணி மனோஜ் குழந்தை பிறக்கனும்னா டாக்டர் தான் போய் பாக்கணும் அப்படின்னு சொல்றாங்க .அதுக்கு மனோஜ் அதுவும் சரிதான் ஆனா எப்போனு தெரிஞ்சுக்கலாம் இவர் ரொம்ப நல்ல ஜோசியராம் .. உடனே ரோகினி முதல்ல நாம கோவா போகலாம்.. நீ சொல்றதும் சரிதான் ரோகிணி அப்படின்னு மனோஜ் சொல்றாரு. இப்போ மீனா தெரிஞ்ச பூக்கடை அக்கா கிட்ட வீட்ல நடந்த சண்டையா சொல்லிட்டு இருக்காங்க அவங்களும் நீ பண்ணது தப்பு மீனா அவரு உனக்காக என்னெல்லாம் பண்ணி இருக்கிறார்.. இப்படிப்பட்ட புருஷன் கிடைப்பதற்கு நீ கொடுத்து வச்சிருக்கணும். .
அவருக்கு புடிச்ச சமையலா சமைச்சு கொடுத்து சமாதான பண்ணு அப்படின்னு சொல்றாங்க. மீனாவும் சரிகான்னு சொல்லிட்டு கிளம்புறாங்க .முத்து கார்ல சவாரிக்கு வந்த அக்கா அழுதுகிட்டே வர்றாங்க ..முத்து கேக்குறாங்க.. அதுக்கு அவங்க ஒன்னும் இல்லப்பா அப்படின்னு சொல்றாங்க. என் கார்ல ஒக்காந்து யாருமே இப்படி அழுதுட்டு வந்ததில்ல உங்க தம்பியா நினைச்சு என்கிட்ட சொல்லுங்க அப்படின்னு கேக்குறாரு.. அந்த அக்காவும் சொல்ல ஆரம்பிக்கிறாங்க ..என் அண்ணனுக்கு உடம்பு சரி இல்லப்பா என் வீட்டுக்காரருக்கும் அண்ணனுக்கும் ஒரு சண்டை ஆயிடுச்சு அதனால பல வருஷமா பேச மாட்டாரு என்னையும் அவர் பேச விடல ஆனா இப்ப அவரு உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்.. பொண்ணா பொறக்கவே கூடாதுப்பா.. புருஷன் பேச்சை கேட்கலைனா சுத்தி இருக்கிறவங்க பொண்டாட்டி சரியில்லைனு சொல்வாங்க.
என் புருஷனுக்கும் அண்ணனுக்கும் நடுவுல நின்னு நான் அல்லாடிட்டு இருக்கேன் பா இப்பவும் நான் அவரை போய் பார்க்கவில்லைனா நாளைக்கு அவருக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கும் .அவர்தான் என்னை வளர்த்து படிக்க வைச்சு கல்யாணம் பண்ணி கொடுத்தாரு அப்படின்னு சொல்றாங்க.முத்துவும் அதைக் கேட்டு அந்த அக்காவுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்காங்க. இப்போ முத்து சவாரி முடிச்சு கார் செட்டுக்கு போறாரு.. அங்கே செல்வம் ஏண்டா உன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு அப்படின்னு கேக்குறாரு..மனசே சரியில்லடா அப்படின்னு சொல்றாரு முத்து.. பொண்டாட்டி கூட சண்டை போட்டா அப்படித்தான்டா இருக்கும். அது இல்லடா.. இப்போ சவாரிக்கு போனப்போ அந்த அக்கா கார்ல சொன்னது எல்லாத்தையும் செல்வத்து கிட்ட சொல்றாரு..
அப்போ உன் மனசாட்சி உறுத்துது .. கடைசி காலத்துல பொண்டாட்டி தாண்டா கூட வருவாங்க நீ தங்கச்சி கூட பேசுடா அப்படின்னு சொல்றாரு. அதெல்லாம் முடியாது டா அவ என் பேச்சை மீறி போனால்ல அப்படின்னு சொல்றாரு. அண்ணா செல்வமும் அதை விடாம உங்க வீட்ல உன் அண்ணன் செய்யாத தப்பா.. என்னெல்லாம் பண்ணி இருக்காரு மீனாவ மணமேடையில ஏமாத்திட்டு போனாரு ..இப்ப கூட மீனாவோட நகையை வித்திருக்காரு இதுக்கெல்லாம் மீனா உன் அண்ணன் கிட்ட பேச கூடாதுன்னு சொல்லி இருக்காங்களா.. உன் குடும்பத்துல நல்லது கெட்டது எல்லாத்துக்குமே வந்து நிக்கிறாங்கல்ல அப்படின்னு கேக்குறாரு..
இத கேட்ட முத்து நீ சொல்றதும் சரிதான் டா மீனா ஒரு நாள் கூட அப்படி எல்லாம் சொன்னது இல்ல அப்படின்னு சொல்றாரு இதோட இன்னைக்கு எபிசோடு முடிந்தது .நாளைக்கு புரோமோல முத்து மீனா கிட்ட ..அக்கா தம்பிக்கு இடையில பாசம் இருக்க கூடாதுன்னு சொல்ல நான் யாரு மீனா. நீ பேசு இனிமேல் நான் எதுவும் சொல்ல மாட்டேன் அது தப்புன்னு இப்பதான் நான் புரிஞ்சுகிட்டேன் அப்படின்னு சொல்றாரு. இதையெல்லாம் கேட்டு விஜயா மூஞ்சிய உர்ருனு வச்சுட்டு நிக்கிறாங்க . அப்போ மீனா அத்தை இந்தாங்க அல்வா சாப்பிடணும்னு சொன்னீங்கல்ல அப்படின்னு குடுக்குறாங்க..மீனாவின் நக்கல் பேச்சுக்கு விஜய என்ன சொல்ல போறாங்கன்னு நாளைக்கு எபிசோடில் பார்க்கலாம் .
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025