சிறகடிக்க ஆசை சீரியல் – மனோஜை மிரட்டும் ரவுடிகள் ..!
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 17 ]எபிசோடில் ரோகினியிடம் இருந்து தப்பியது முத்துவின் செல்போன் ..சீதாவை தேடி வரும் வரன்..

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 17 ]எபிசோடில் ரோகினியிடம் இருந்து தப்பியது முத்துவின் செல்போன் ..சீதாவை தேடி வரும் வரன்..
மனோஜால் சொதப்பிய ரோகினியின் பிளான் ;
ரோகினி முத்து குடிக்கிற பால்ல தூக்க மாத்திரை கலந்து இருக்கிறாங்க.. அத குடிச்சிட்டு முத்துவும் மீனாவும் நல்லா தூங்கிறாங்க. ரோகிணி முத்துவோட செல்போனை எடுக்க வராங்க .. அந்த டைம்ல விஜயா வந்து இங்க என்ன பண்ற ரோகினி .. அதுக்கு ரோகிணி சொல்றாங்க ஆன்ட்டி தூக்கம் வரல அதான் டீ போட்டு குடிக்கலாம்னு வந்தேன் டீ தூள் எங்க இருக்குன்னு தெரியல மீனா கிட்ட கேக்கலாம்னு போனேன்னு சொல்றாங்க. உடனே விஜயா சரி சரி அவ எதுக்கு சிரிச்சான்னு சொன்னாளா அப்படின்னு கேட்கவும் ரோகிணி ஆன்ட்டி எனக்கு தூக்கம் வருது நான் போறேன்.. என்னம்மா இப்பதானே தூக்கம் வரலைன்னு சொன்ன அப்படின்னு சொல்றாங்க இப்ப வருது ஆன்ட்டின்னு சொல்லி நழுவுறாங்க . விஜயா போனது மறுபடியும் செல்போன் எடுக்க வர்றாங்க. பின்னாடி மனோஜ் வந்து ரோகிணி தூக்கி ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சிடுறாரு..
இதுல ரோகினி ரொம்பவே டென்ஷனாக ஆயிடறாங்க. காலையில விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க.. ஆனா மீனா சிரிச்சத நெனச்சிட்டு ஒழுங்கா டான்ஸ் ஆடாம இருக்குறத பாத்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் சிரிக்கிறாங்க.. வீட்ல மீனா சிரிச்சத பார்வதி கிட்ட சொல்லி மீனா கிட்ட கேக்க சொல்றாங்க பார்வதியும் கால் பண்ணி மீனாவ விசாரிச்சுட்டு சிரிச்சத பத்தி கேக்குறாங்க. அதுக்கு மீனா புரிஞ்சுகிட்டு மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்கிறாங்க .. விஜயா மறுபடியும் கோபம் வந்து இப்படித்தான் பண்ற .. நான் எப்படியாவது இதை கண்டுபிடிக்க விட மாட்டேன்னு சொல்றாங்க. இப்போ மனோஜ் கடையில மனோஜோட பாடிகார்டு தலையில கட்டோட நாலு ரவுடிய கூட்டிட்டு வராரு .. அவங்க எல்லாரும் மனோஜ மிரட்ட ஆரம்பிக்கிறாங்க. எங்க வீட்டு பையன உங்கள நம்பி தானே அனுப்பி வச்சன் இப்படி மண்டையில் காயத்தோட அனுப்பிட்டீங்க ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகி இருக்கு பணத்தை எடுங்கன்னு சொல்லி மிரட்டுறாங்க.
மனோஜை மிரட்டும் ரவுடிகள் ;
மனோஜ் என்கிட்ட பணம் இல்ல அப்படின்னு சொல்லவும் இருங்க நான் போலீஸ் கால் பண்றேன்னு சொல்ல இல்ல போலீஸெல்லாம் வேண்டாம்னு மனோஜ் சொல்லுறாரு. அப்போ பணம் இல்லாட்டி என்ன நாங்க பொருளை எடுத்துக்குறோம் . இதெல்லாம் பாத்துட்டு மனோஜ் என்ன பண்றேன்னு தெரியாம நின்னுட்டு இருக்காரு.. கோவில்ல சீதாவும் அவங்க அம்மாவும் சத்யாவை பற்றி பெருமையாக பேசிட்டு இருக்காங்க.. சரி மா.. காலேஜ் கிளம்புறேன்னு சீதா கிளம்பிடுராங்க.. இப்போ ஒரு அம்மா வந்து சீதாவோட அம்மா கிட்ட சீதா பத்தி விசாரிக்கிறாங்க ..என் பையனுக்கு உங்க பொண்ணு தர்றீங்களான்னு பொண்ணு கேக்குறாங்க உடனே அவங்க அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் வீட்ல கேட்டுட்டு உங்களுக்கு சொல்றேன் . மீனாவுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லவும் மீனாவும் சந்தோஷப்படுறாங்க இரு மா நான் அவர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்றாங்க அதோட இன்னைக்கு எபிசோட முடிச்சு இருக்காங்க.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025
இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025