தமிழ்நாட்டில் வசூலில் அடிச்சி தூக்கிய தலயின் 'விஸ்வாசம்'! இத்தனை கோடிகள் வசூலா?!!

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. இப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் வெளியானது. விஸ்வாசம் திரைப்படத்தை சிறுத்தை சிவா

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. இப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் வெளியானது. விஸ்வாசம் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆதலால் நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது. இப்படத்தை கே.ஜி.ஆர் ஸ்டூடியோஸ் வாங்கி தமிழ்நாட்டில் வெளியிட்டது. அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படம் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலை தமிழ்நாட்டில் எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

DINASUVADU