விஸ்வாசம் பட வசூல்...திரையரங்க உரிமையாளர் நெகிழ்ச்சி...!!

பொங்கலன்று வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படம் குறித்து இரண்டு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.அதோடு இல்லாமல் இரண்டு பெரிய நடிகர்களின்

பொங்கலன்று வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படம் குறித்து இரண்டு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.அதோடு இல்லாமல் இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளியாகினால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் தற்போது பேட்ட விஸ்வாசம் படம் நல்ல வசூலை குவித்து வருகின்றது.

‘இந்நிலையில் விஸ்வாசம்’ படம் 125 கோடி வசூல் செய்துள்ளதாக கூறிய கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின்  ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: விடுமுறைக்கு ஒரே சமயத்தில் இரண்டு படம் ரிலீஸ்  ஆகலாம் என்று ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ நிரூபித்துவிட்டது. வசூலில் இரண்டு படமும் நல்லபடியாக ஓடி கொண்டிருக்கிறது.

பேட்ட படம் 125 கோடி வசூல் என்று நான் பதிவு போட்டேன். என் அலுவலகத்துக்கு வாருங்கள், நான் வசூலுக்கான ஆதாரத்தை கொடுக்கிறேன். படம் வாங்கிய நானே சொல்கிறேன்.விஸ்வாசம் படத்தால் அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டி விட்டார்கள். எந்த ஒரு அறிவிப்பு வந்தாலும் அதற்கொரு கொண்டாட்டம் தான் . என்று  கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.