சீயான் விக்ரம் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இந்த முறை ரசிகர்களை திருப்திபடுத்துமா?!

சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை அடுத்து டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் இயக்கிய அஜய்

சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை அடுத்து டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த புதிய மன்னர்கள், ராவணன் ஆகிய படங்கள் தோல்வியை தழுவின. அடுத்ததாக வெளியான ஐ படம் வெற்றி என்றாலும் ஷங்கர் படத்தில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை என்பதால் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

ஆதலால் இந்த படம் ஹிட்டாகுமா என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.